Pages

Sunday, October 4, 2015

அதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் ! [ படங்கள் இணைப்பு ]

இந்திய தேர்தல் ஆணையத்தால் 01-01-2016 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை தயார் செய்து 15-09-2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் இரண்டாம் கட்டமாக தமிழகமெங்கும் உள்ள  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று 04-10-2015 நடைபெற்று வருகிறது.

இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ( Booth Level Officers) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (Booth Level Agents) ஆகியோர் ஒருங்கிணைந்து வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்-நீக்கல்- திருத்தம் ஏதேனும் இருப்பின் அவற்றைக் கண்டறிந்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறிப்பாக நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம், மேலத்தெரு சூனா வீட்டு பள்ளிக்கூடம், காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள 1 ம் நம்பர் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் இன்று காலை 10 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...