Pages

Saturday, October 31, 2015

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு எதிரொலி: 2 முக்கிய கோரிக்கைகள் உடனடி ஏற்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த [ 15-06-2015 ] அன்று அதிரை பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேரூராட்சி அலுவலக தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் வார்டுகளின் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்க வில்லை எனவும், அரசியல் காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி கடந்த [26-10-2015 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம்  மற்றும் 19 வது கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா ஆகியோர் தனித்தனியே எழுதிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரிடையாக சென்று வழங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை அதிரை பேரூராட்சியின் மன்றக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மனித நேய மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தரவேண்டும் எனவும், தவறினால் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என பேசினார்கள். இதற்கு தயாராக அதிரை பேரூராட்சி அலுவலக வராண்டாவில் அதிரை மனிதநேய மக்கள் கட்சியினர் காத்திருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு கூடியது.

இந்தநிலையில் மன்றக்கூட்டம் முடிந்தவுடன் அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு.முனியசாமி மனிதநேய மக்கள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 17 மற்றும் 19 வது வார்டுகளின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகக் கூறினார். இதையடுத்து 17 வது வார்டு கவுன்சிலர் ரபீக்கா முஹம்மது சலீம் மற்றும் 19 வது கவுன்சிலர் செளதா அஹமது ஹாஜா ஆகியோர் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக செயல் அலுவலர் முனியசாமியிடம் வழங்கினார்கள்.

தங்கள் வார்டுகளின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நடத்த இருந்த பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிரை மனிதநேய மக்கள் கட்சியினர் அறிவித்தனர்.
 
 
 
 
 
 
 

3 comments:

 1. 21வார்டு உருபிநேர் களிடமும் கோரிக்கை மனு
  பெறபட்டுள்ளது நீங்கள் என்னமோ மிரட்டி ஓபுக்கொண்டது போல் சொலுகிறீர்கள் முதலில் நீக்கள் எந்த கச்சு இந்த கச்சை தமீம் அன்சாரி அவருடையது என்று சொலுகிறார் கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது நாங்கதான் என்றுசொல்லுவது தவறு தி மு க கான்சிலர் எப்போ உங்க கச்ல் சேர்ந்தார் போட்டோ எடுக்க வேற ஆல் கிடைகலையா இந்த டீப் மதுக்கூர் பார்ட்டி ?வரலையா முதலில் சேர்மனிடம் சொல்லாமல் இய் ஓ இடம் குடுத்து உளோம் என்று சொல்கிரிர்களே வெக்கமா இல்லையா சேர்மேன் மார்க்கெட்
  மார்க்கெட் ஆகிரமபு அகட்ட போறாராம் வங்க அதை போய் எதிர்போம் தண்ணீர் திரட்டு கனக்சனை தட்டி கேட்க வக்கு இல்லாத கான்சிலர் இன்னும் எவ்வெலெஉ நாளைக்கு முளுபூசநிகாவை சோத்தில் மறைப்பது

  ReplyDelete
 2. When content on election they told ..we are independent.Now ,How M M K Labeled....?

  ReplyDelete
 3. எந்தக் கோரிக்கை கொடுத்தாலும் பரிசிலிக்கிறோம் என்று சொல்லிவிடுவார்கள்; ஏன்னா ; திருட்டு தண்ணீரை தடுக்க போய் அவர்களது சட்டை கிழிந்தது மிச்சம் என்ன நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்? இனியும் போனால் இருக்கும் வேஷ்டியை புடுங்கி விடுவார்கள் என்ற பயம் இருக்கும்.

  ஒவ்வொருத்தரும் வெவ்வேறு அமைப்பில் இருப்பதால் பொது நலன் கருதி மனு கொடுத்தாலும் அதனை - போட்டி -பொறாமையின் காரணமாக செயல் படுவதாக பார்க்கப் படுகிறது. சமீபத்தில் கலக்டரை பார்த்து மனு கொடுக்கப் பட்டது? அவர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அங்கே போராட்டம் பண்ணலாம் . அதை விட்டுட்டு இங்கே மனு கொடுப்பது காழ்புணர்ச்சி அன்றி வேறதும் இல்லை.

  நம்ம அமைப்பு மக்களிடையே ஒற்றுமை பற்றி நல்லாவே பேசிக்கொள்கிறார்கள்- வேதனை !

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...