Pages

Monday, October 5, 2015

உலகளவில் செல்வாக்குள்ள 500 இஸ்லாமியர்களில் கீழக்கரை மார்க்க அறிஞர் தேர்வு!

உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 2016க்கான‌ 500 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் கீழக்கரை தைக்கா ஷுஐப் இடம் பெற்றுளளார். கடந்த‌ ஆண்டுகளில்  மறைந்த இந்திய‌ குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த தமிழக தொழிலதிபர் கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட இம்மூவரும் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

2016க்கான இப்பட்டியலில் முதல் 50 வரிசையில் ஜோர்தான் அரசர் அபுதுல்லா இப்ன் அல் ஹுசைன், சவூதி அரேபியா அரசர் சல்மான் ,அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான்,அமீரக பிரதமர் சேக் முஹம்மது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக தேர்வு உலகில் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...