தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி நேற்றுமுதல் துவங்கியது.
அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக இதன் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் பெரும்பாலான பணிகள் நேற்றுடன் நிறைவுற்றதைதொடர்ந்து அதிராம்பட்டினம் பகுதியின் ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி தொடங்கியது.
அதிராம்பட்டினம் ஆலடிக்குளத்தில் நீர் நிரப்பிவரும் பணிகளை இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் அதிரை பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர்.
கடந்த இருவாரங்களாக அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து கிராமப்புறங்களில் உள்ள ஓடைகளிலும், குளங்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால எதிர்வரும் நாட்களில் தண்ணீர் தட்டுபாடு இருக்காது என நம்பப்படுகிறது.
ReplyDeleteவறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது என்கிறீர்கள் இப்போ எங்கே வறட்சி தாண்டவமாடுகிறது? இப்போ தண்ணீர் நிரப்புவதால் மாடும் தண்ணீர் குடிக்க வரப்போவதில்லை மனுசனும் அழுக்கு தீர குளிக்கப் போவதில்லை. என்ன நோக்கத்திற்காக திட்டம் தீட்டப் பட்டதோ அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கோடை காலத்தில் மின்சாரமும் தண்ணீரும் தட்டுப்பாடாக இருந்த அதிரைக்கு இத்திட்டம் ஆறுதலாக இருக்குமா? அசுரவேகத்தில் திட்டத்தை செயல்படுத்திய சேர்மனுக்கு வாழ்த்துக்கள்.
U say correct
Deleteமனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆனால் இதில் உள்ள படத்தை பாருங்கள். தண்ணீர் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் அதிகமாக தண்ணீர் வந்தால் அதை சேமிக்க இயலாத அளவுக்கு காட்டுக் கருவை, எருக்கஞ்ச்செடிகள் போன்றவை குலங்களுக்குள் மண்டிப் போய்க் கிடப்பதையும் அகற்றினாலே இந்தப் பனியின் நோக்கம் முழுமை பெறும்.
சேர்மன் அவர்களின் அன்பான கவனத்துக்கு இதை தெரிவிக்கிறேன். அவர் களம் இறங்கினால் இந்தக் களையும் நீக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
Mashallah Mabrook
ReplyDeleteMashallah Mabrook
ReplyDelete