Pages

Friday, October 9, 2015

அதிரை வழியே தன்னந்தனியாக சைக்கிளில் டெல்லி செல்லும் 82 வயது முதியவர்!

கோவை மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 82 ) காந்தியவாதியான இவர் தனியார் மில் ஒன்றில் சூப்பர் வைசராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைக்கக்கோரி இந்திய ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக தன்னந்தனியாக மூன்று சக்கர சைக்கிளில் டெல்லி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிரை ஈசிஆர் சாலை வழியே சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் கிருஷ்ணன் நம்மிடம் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளை ஒன்றாக இணைப்பது அவசியம். இதனால் நாடு செழிக்கும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வலியுறுத்தி முதன்முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து டெல்லிக்கு 53 நாட்கள் பயணம் மேற்கொண்டேன். இதைதொடர்ந்து இரண்டாவது பயணமாக கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னியாகுமரிலிருந்து டெல்லிக்கு 65 நாட்கள் பயணம் மேற்கொண்டேன். நான் மேற்கொண்ட இரண்டு டெல்லி பயணங்களிலும் அப்போதைய பொறுப்பில் இருந்த இந்திய ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க இயலவில்லை. எனது நெடுந்தூர சைக்கிள் பயணம் தோல்வியில் முடிந்தது. பெரும் எமாற்றுத்துடன் ஊர் திரும்பினேன். எனினும் எனது முயற்சியிலிருந்து பின்வாங்க வில்லை.

நான் இப்போது மூன்றாவது முறையாக டெல்லிக்கு மூன்று சக்கர சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 01-10-2015 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு ஈசிஆர் சாலை வழியாக தற்போது அதிராம்பட்டினம் வந்துள்ளேன். பின்னர் பெங்களூர், ஐதராபாத், நாக்பூர், குவாலியர், ஆக்ரா வழியாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன். என்னுடைய நியாமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வரை எனது முயற்சி தொடரும்' என்றார்.

அதிராம்பட்டினம் வந்தடைந்த முதியவர் கிருஷ்ணனை அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் இத்ரீஸ் அஹமது வரவேற்றார். இவரது பயணத்தை பாராட்டி சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் நவாஸ்கான், அப்துல் ஹலீம் உடனிருந்தனர்.

படங்கள்: 
1. மூன்று சக்கர சைக்கிளில் தன்னந்தனியாக டெல்லி செல்லும் முதியவர் கிருஷ்ணன்.
2. முதியவரின் பயணத்தை பாராட்டி சால்வை அணிவித்து வழியனுப்பி வைக்கும் அதிராம்பட்டினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் இத்ரீஸ் அஹமது மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் நவாஸ்கான், அப்துல் ஹலீம் ஆகியோர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...