Pages

Tuesday, October 6, 2015

இணைய தளம் வழியாக பட்டா மாறுதல் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைய தளம் வழியாக பட்டா மாறுதல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இணைய தளம் வழியாக பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு முன்னோடி வட்டத்தில் இணைய தளம் வழியாக பட்டா மாறுதல் திட்டம் (Web Based on Line Patta Transfer) பரிசாட்த முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

திருவையாறு வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இணைய தளம் வழியாக பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திருவையாறு வட்டத்தில் உள்ள பொது மக்கள், விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் கிரயம் பெற்றுள்ள இடங்களுக்கு (புன்செய், நன்செய்) பத்திர நகல்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இயங்கி வரும் சேவை மையம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இ சேவை மையத்தில் மனு வழங்கலாம்.

முழு புலம் பட்டா மாறுதல், கூட்டு பட்டா மாறுதல், உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆகிய இனங்களில் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.  பட்டா மாறுதல் செய்து கொள்ள அரசு ஒரு மனுவிற்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

திருவையாறு வட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணித்து மாவட்டத்தில் உள்ள இதர வட்டங்களிலும் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.  இத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் மனு வழங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், நில அளவைத் துறை உதவி இயக்குநர் திரு.குழந்தைவேலு, வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், தேசிய தகவலியல் மைய அலுவலர் திரு.ஸ்டான்லி மற்றும் வருவாய்த்துறையினர், பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...