Pages

Tuesday, October 13, 2015

அதிராம்பட்டினம் அருகே டெங்கு காய்ச்சலை தடுக்க ஒட்டுமொத்த தூய்மைப்பணி!

அதிராம்பட்டினம் அக் 12,2015
தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் உத்தரவுப்படி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர்.ஆ.சுப்பிரமணி வழிகாட்டுதல்படி, அதிரையை அடுத்த பள்ளிகொண்டான், சேண்டாகோட்டை ஊராட்சி பகுதிகளில் தீவிரகாய்ச்சல் தடுப்பு முகாம், ஒட்டுமொத்த தூய்மைப்பணி, டெங்கு விழிப்புணர்வு முகாம் ஆகியன 09.10.2015 அன்று நடைபெற்றன.

முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கு.அறிவழகன் தலைமைவகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டாரஊராட்சிகள்) பிச்சை மொய்தீன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்)இரா.சாந்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர். பள்ளிகொண்டான் ஊராட்சி மன்றதலைவர் சசிகுமார் அனைவரையும் வரவேற்றார்.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கு.அறிவழகன் தலைமையில், நம்பிவயல் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.சரண்யா நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர்.சந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள்எஸ்.வி.முத்துசாமி, வி.ரவிச்சந்திரன், கே.காசிநாதன், எஸ்.சந்திரசேகரன், கா.பாஸ்கரன், எஸ்.வெங்கடேஷ்ஆகியோர் கலந்து கொண்டு கொசுக்களால் பரவும் நோய்கள், நீரினால் பரவும் நோய்கள்பற்றியும், அவைகளை தடுக்கும் முறைகள்பற்றியும் பொதுமக்கள்மற்றும் பள்ளிமாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.

காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்தனர். நிலவேம்பு குடிநீர் முகாம் அமைக்கப்பட்டு, பள்ளிமாணவ, மாணவியர்கள், கிராமமக்களுக்கு வழங்கப்பட்டன.நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் செயல்விளக்கம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேண்டாகோட்டை, பள்ளிகொண்டான், ஊராட்சி சார்பில், கிராமதன்னார்வ மகளிர்கள் சுமார் 225 பேர் கலந்து கொண்டு, கிராமப்பகுதிகளில் இருந்த பயன்படுத்தப்படாதடயர்கள், பாட்டில்கள், பானை ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட பொருட்கள் டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.மண்பாண்டத் தொழிலாளர்கள், ஹாலோபிளாக் தொழிலாளர்கள்ஆகியோர்களுக்கு கொசுப்புழு வளராவண்ணம், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க நலக்கல்வி வழங்கப்பட்டது. பொது சுகாதாரத்துறை சார்பில், பிளிச்சிங் பவுடர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, கிராமப்பகுதியில் வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகள்தூய்மை செய்யப்பட்டன.ஊராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள்தூய்மை செய்யப்பட்டன. சுகாதார துறையால்,உள்ளாட்சி துறையால் வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு ஆய்வு செய்யப்பட்டது.

குழி வெட்டி குடிநீர் பிடிக்கும் பகுதியில் கண்டறியப்பட்டு, உள்ளாட்சி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி கொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி சார்பில் 10,000 துண்டு பிரசுரங்களும், சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி சார்பில் 10,000 டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டு பொதுமக்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. முகாமில் பள்ளிகொண்டான் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிதலைமைஆசிரியர் இரா.புஷ்பலதா, சேண்டாக்கோட்டை தலைமைஆசிரியர் துரைராஜ், பள்ளிகொண்டான் ஊராட்சி செயலர் கார்த்திகேயன், சேண்டாக்கோட்டை ஊராட்சி செயலர் எம்.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.முடிவில் சேண்டாகோட்டை ஊராட்சி மன்றதலைவர் எம்.அமிர்தம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...