Pages

Friday, October 23, 2015

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்: நேரடி ரிப்போர்ட் !

அதிரை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிரை தக்வா பள்ளி அருகில் மாபெரும் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை நகர செயலாளர் ஹாலித் தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் ஏ.ஆர் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் 'மதசார்பற்ற இந்தியாவும், இன்றைய நிலையும்' என்ற தலைப்பில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மமக மாநில அமைப்பு செயலாளரும், ஆம்புர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எம்எல்ஏ, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக தமுமுக அதிரை நகர பொருளாளர் செய்யது அஹமது புஹாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா அவர்கள் கடந்த அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை அங்கீகரித்தும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை நகர துணை செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்டுள்ள எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை மீண்டும் இயங்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்தார்.

தமுமுக அதிரை நகர துணை செயலாளர் கமாலுத்தீன் அவர்கள் கடந்த [ 23-09-2015 ] அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்கள் பிலால் நகர் பகுதியின் குடியிருப்பு வழியே செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. அரசு இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, சட்டசபையில் குரல் எழுப்பிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்தார்.

தமுமுக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மன்சூர் அவர்கள் உ. பி யில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக 50 வயது முஸ்லீம் நபரை அடித்து படுகொலை செய்து அவரது மகனை காயப்படுத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாசித்தார்.

பட்டுக்கோட்டை நகர மமக துணை செயலாளர் வீரமணிகண்டன் அவர்கள் தமுமுக ஆற்றிவரும் ஆம்புலன்ஸ் சேவை குறித்து சிறிது நேரம் பேசினார். கூட்ட முடிவில் மமக துணைச் செயலாளர் நசுருதீன் நன்றி கூறினார்.

கூட்டதில் சிறப்பு அழைப்பின் பேரில் மமக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் ஜே.கலந்தார், தமுமுக மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா, மதுக்கூர் பேரூர் தமுமுக கவுன்சிலர் எம். கஃபார், மதுக்கூர் ஃபவாஸ், தமுமுக - மமக தஞ்சை மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியரோடு அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...