Pages

Wednesday, October 7, 2015

இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

தஞ்சாவூர் ஒன்றியம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திர தனுஷ் தடுப்பூசி 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டு நாடு முழுவதும் 201 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மார்ச் 2015ல் இத்திட்டம் முதல் சுற்றில் 8 மாவட்டங்களில் இரண்டாவது சுற்றில் 18 மாவட்டங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

0 முதல் 2 வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகள் மறறும் கர்ப்பிணிகளை கண்டறிந்து அனைத்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி பெற்ற கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் சதவிகிதம் நாடு முழுவதிலும் 90 சதவிகிதம் மேல் உயர்த்துதல், மேலும் இத்தடுப்பூசியினால் காச நோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை பி, ஜப்பானிய முளைக்காய்ச்சல் மற்றும் தட்டம்மை போன்ற 7 நோய்கள் வராமல் இத்தடுப்பூசிகளின் மூலம் தடுக்கப்படுகின்றது.

தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி 14.10.2015 வரை முதல் சுற்றும், 7.11.2015 முதல் 14.11.2015 வரை இரண்டாம் சுற்றும், 7.12.2015 முதல் 14.12.2015 வரை மூன்றாம் சுற்றும், 7.1.2016 முதல் 14.01.2106 நான்காவது சுற்றுமாக தடுப்ப10சிகள் வழங்கப்படுகின்றது.

தடுப்ப10சி வழங்குவது தொடர்பாக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கனவாடி பணியாளர்களுக்கு வட்டார, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய 2583 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற் உள்ளது.  இப்பணியில் 2156 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.  தடுப்ப10சி பெறாமல் விடுபட்ட 2148 குழந்தைகளும் 946 கர்ப்பிணி பெண்களும் பயன் பெற உள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் 0 முதல் 2 வயது வரை உள்ள தடுப்பூசிக்கு விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அனைவருக்கும் அனைத்து அங்கன்வாடி மையங்கள், நகர்நல மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கும், காப்பிணிகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர் திரு.எம்.ரெங்கசாமி,  மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரிகோபால், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ம.சிங்காரவேலு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், மாநகர் அலுவலர் டாக்டர் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் திருமதி.வசந்தா சைவராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.கௌசல்யா ஆனந்தன், திரு.கோவி.மனோகரன், வட்டாட்சியர் பா.சுரேஷ் மற்றும் ஏராளமான தாய்மார்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...