Pages

Tuesday, October 6, 2015

மமக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலளார் தமிமூன் அன்சாரி பங்கேற்பு ?

மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றகுழு தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் பொதுக்குழு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெறும் என கூறியிருந்தார்.

அதேநாளில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலளார் எம்.தமிமுன் அன்சாரி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் கட்சியினரிடையே பெரும் குழப்பம் நீடித்தது. மேலும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இருவேறு இடங்களில்  நடைபெற இருப்பதாக கட்சியின் முக்கிய தலைவர்கள் தனித்தனியே வெளியிட்ட திடீர் அறிவிப்புகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் இருதரப்பினரிடையே நேற்று இரவு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இன்று காலை தாம்பரத்தில் நடந்துவரும் பொதுக்குழு கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலளார் எம். தமிமுன் அன்சாரி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நடக்க இருந்த எக்மோர் பொதுக்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதநேய மக்கள் கட்சியில் நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தமிழக முஸ்லிம் கட்சிகளும் இயக்கங்களும் ஒரு விஷயத்தை மனத்துள் பதிவு செய்துகொள்ள வேண்டும்:

    தமிழக முஸ்லிம்களைத் துண்டாட வேண்டும் என்ற பிரிவினை எண்ணம் கொண்டு அரசியல் நடத்துவோர், முஸ்லிம்களின் ஓட்டைப் பெற்றுவிடவேண்டும் என்று, எல்லாத் திராவிடக் கட்சிகளும், இருவேறு காங்கிரஸ் கட்சிகளும், BJP யும் அதைச் சார்ந்த கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் கங்கணம் கட்டியுள்ளார்கள்!

    இந்த நேரத்தில்தான், நாம் விழிப்புணர்வைக் கொள்ள வேண்டும். முஸ்லிம் கட்சிகளான த.மு.மு.க,, எஸ். டி.. பி.ஐ,, WPI., முஸ்லிம் லீக், ('நாங்கள் அரசியல் கட்சி அல்ல; ஆனால் முஸ்லிம் கட்சிகள் எதனோடும் கூட்டு சேர மாட்டோம்' என்று கூறித் தலைக்கனம் கொண்டுள்ள) த. த. ஜ.வும், ஐ. த. ஜ.வும் எதிர் வரும் தமிழகச் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கிவர இருக்கும் இந்த வேளையில், கொள்கைப் பிரச்சினைகள் எவையாக இருந்தாலும், அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, முஸ்லிம் கட்சிகளுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து, முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, நமது தமிழகச் சட்ட மன்றத்தில் கூடுதலான முஸ்லிம் உறுப்பினர்கள் பங்கெடுத்து, நமது தேவைகளையும் உரிமைகளையும் மன்றத்தில் எடுத்து கூற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால்தான், மற்ற அரசியல் கூத்தாடிகளின் வாய்களை அடைக்க முடியும்; வலையில் விழாதிருக்க முடியும். இந்த நிலைபாடுதான் தமிழக முஸ்லிம்களுக்கு வலிமையைப் பெற்றுக் கொடுக்கும். இல்லாவிட்டால், மற்றக் கட்சிகளுக்கும், நமது ஒற்றுமையைப் பற்றி ஷைத்தானிய குணம் கொண்டவர்களுக்கும், "ஓ! இவர்கள் இப்படிப்பட்டவர்களா?" என்ற அச்சத்தை எற்படுத்தும்.

    சிந்திப்பார்களா? பொறுத்திருப்போம்! தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறை சாற்றும் இந்த நிலைபாடு. அரசியல் வேட்டையாடிகள் எச்சரிக்கை ஆவார்கள்.

    சிந்தித்துத்தான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்மத் அண்ணன் அவர்களுக்கு

    நாங்கள் எப்படி இவர்களை நம்பி ஒட்டு போடுவது ? ஒன்றாக இரூந்து இப்பா !
    பதவி ஆசை பட்டு சண்டை போட்டு கொள்கிரகள் , நமக்கு நாமே சண்டை இரண்டு பொது குழு . தமீம் அன்சாரி அளித்த பேட்டியில் ஜவாஹிருல்லாஹ்வின் பொறாமையே கரணம் என பகிரங்கமாக கூறியுள்ளார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...