Pages

Wednesday, October 7, 2015

ஆட்டுத்தோல் விலை வீழ்ச்சி: கவலையில் வியாபாரிகள் !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தினமும் சுமார் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடு, வெள்ளாடு போன்றவை இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டின் தோலை வியாபாரிகள் தனியாக வாங்கிச்செல்வார்கள். இவற்றை சென்னையில் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆட்டுத்தோல் மூலம் ஷூ, கிளவுஸ், ஜெர்க்கின் போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால் வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது.

இந்நிலையில் ஆட்டின் தோல் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ரூ 300 வரை விலை போன ஆட்டுத்தோல் தற்போது ரூ 100 க்கு விலை போகிறது. இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிரை 'நிஜாம் மட்டன் ஸ்டால்' உரிமையாளர் கே. ராஜிக் அஹ்மது நம்மிடம் கூறுகையில்,
ஆட்டுதோலின் திடீர் விலை வீழ்ச்சியால் கடந்த 6 மாதங்களாக ஆட்டுத்தோல் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரூ 300 வரை விற்பனையான ஆட்டுத்தோல் தற்போது ரூ 100 க்கு விற்பனையாகிறது. இவற்றை வாங்கிச் செல்ல தோல் வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களின் தோல் நிறுவனங்களில் ஏராளமான தோல்கள் கிடங்குகளில் தேங்கி கிடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தோல் ஏற்றுமதியில் திடீரென ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கண்டறிந்து அவற்றை நீக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...