Pages

Tuesday, October 6, 2015

மமக புதிய தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்-பொதுச்செயலாளராக அப்துல் சமது தேர்வு !

தாம்பரத்தில் இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தமீமுன் அன்சாரியும், இணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஆரூண் ரஷீத்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக தமுமுகாவின் மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மாநில பொதுச்செயலாளராக அப்துல் சமது ஆகியோர் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 comments:

 1. தாத்ரி விவகாரம்; UP ல் மாட்டு இறைச்சி சாப்பிட்டதற்காக காட்டுமிராண்டி கும்பலால் ஒருவர் கொல்லப்பட்டார் அதற்க்கு இதுவரை பிரதமரோ தமிழ்நாட்டின் முதல்வரோ மற்ற அரசியல் கட்சிகளோ கண்டனம் கூட தெருவிக்க வில்லை; சிறுபான்மை சமூக காவலர்கள் என்றுக்கூரிக்கொள்ளும் அரசியல் வியாதிகள் தேர்தல் நேரத்தில் அமைப்புகளை தங்களோடு இணைத்தும்; வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்து சமூகத்துக்கு என்ன செய்தார்கள்? பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு உண்டா?

  இலவசமாக மாணவர்களுக்கு மடிக்கணினி தாய்மார்களுக்கு மொபைல் கொடுத்த கையோடு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த கட்சிக்கு ஒற்றை இலக்கில் சீட்டும் கொடுத்து விடுகிறார்கள்; இந்த சீட்டுக்காக தேர்தலுக்கு தேர்தல் அமைப்பு உடைபடுகிறது; கொள்கையும் இல்லை ஒற்றுமையும் இல்லை வேதனையிலும் வேதனை. ஒற்றுமையே பலம் என்று எப்போ உணரப்போகிறோம்?

  ReplyDelete
 2. அட பாவிகளா உன்னை நம்பி எங்க ஊர் காரன் ராவா பகல்லா உலைதனடா பேசாமே  பி ஜெ பி யோட  கூட்டணி வைதுட்கட அது தான் ஆல் மாறி  மாறி எங்க ஊருக்கு வந்தியளோ !

  ReplyDelete
 3. காட்சிக்கு எளியவர் - பழக இனியவர்- பம்பரமாய் சுழல்பவர் - அனைத்துக்கும் மேலாக அரசியலில் வளர்ந்து வரும் ஒரு இளைஞர் தமீமுன் அன்சாரியாவார்.
  தான் பொதுச் செயலாளராக இருக்கும் ஒரு இயக்கம் நடத்தும் பொதுக்குழு தனக்கே அறிவிக்கப்படாமல் என்று இருக்கும்போது யாருக்கும் ரோஷம் வரும். அதிலும் இவர் சொறி ஆணம் ஊற்றி சாப்பிடும் தோப்புத்துறைக்காரர்.
  போட்டி பொதுக்குழு என்று அறிவித்தார்
  பொதுநலம் நாடும் நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் அதை ரத்து செய்தார்.
  பகைமை வளரக்கூடாது என்று பண்பு காட்டி தனது ஆதரவாளர்களையும் தாம்பரம் பொதுக்குழுவுக்கு அனுப்பினார்.
  ஆனால் சமாதானம் என்று பேசி அனைவரும் ஒன்று கூடி ஊர் விலக்குத் தீர்மானம் நிறைவேற்றி உடனே எதிர்வினை காட்டியது தமீமுன் அன்சாரியின் நல்லெண்ணத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே காணவேண்டி இருக்கிறது.
  சற்று ஆறப்போட்டிருக்கலாம். அன்புக்கும் அரவணைப்புக்கும் முக்கியமாக பொறுமைக்கும் உதாரணமான பேராசிரியரை உடன் வினை ஆற்றவைத்த சக்திகள் யாவை?
  ஊரெங்கும் சுற்றி சுற்றி வந்து கட்சி வளர்த்த ஒரு இளைஞரை எதிர்காலம் இல்லாமல் செய்துவிட யாரோ விரித்த வலையில் ம ம க விழுந்துவிட்டதா?
  தமீமுன் அன்சாரியின் அன்பால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்து இன்றுவரை பணியாற்றிய எத்தனயோ பேர் இன்று கலங்கி நிற்பதை கண்ணீர் சிந்துவதைப் பார்த்துவிட்டே இதை எழுதுகிறேன்.
  ஆனாலும் அவருக்கு ஒன்று சொல்லலாம் ஆறுதலாக அல்ல. எழுச்சி கொள்வதற்காக
  விழுவது மீண்டும் எழுவதற்கே. அரசியல்வாதிகள் ரப்பர் மரம் போன்றவர்கள். கீறக் கீறத்தான் பால் வடியும். தழும்புகள் விழ விழத்தான் தகுதிகள் அதிகரிக்கும்.
  வெற்றியைக் கண்டு மயங்கிவிடாதே தோல்வியும் தொடர்ந்து வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே தொடர்ந்தொரு வெற்றி வரும்
  ( முக நூலில் நான் போட்ட பதிவு. )

  ReplyDelete
 4. ஊரெங்கும் சுற்றி சுற்றி வந்து கட்சி வளர்த்த ஒரு இளைஞரை எதிர்காலம் இல்லாமல் செய்துவிட யாரோ விரித்த வலையில் ம ம க விழுந்துவிட்டதா?
  தமீமுன் அன்சாரியின் அன்பால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்து இன்றுவரை பணியாற்றிய எத்தனயோ பேர் இன்று கலங்கி நிற்பதை கண்ணீர் சிந்துவதைப் பார்த்துவிட்டே இதை எழுதுகிறேன்.
  ஆனாலும் அவருக்கு ஒன்று சொல்லலாம் ஆறுதலாக அல்ல. எழுச்சி கொள்வதற்காக
  விழுவது மீண்டும் எழுவதற்கே. அரசியல்வாதிகள் ரப்பர் மரம் போன்றவர்கள். கீறக் கீறத்தான் பால் வடியும். தழும்புகள் விழ விழத்தான் தகுதிகள் அதிகரிக்கும்.
  வெற்றியைக் கண்டு மயங்கிவிடாதே தோல்வியும் தொடர்ந்து வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே தொடர்ந்தொரு வெற்றி வரும்....

  ReplyDelete
 5. இதை தொடர்ந்து தமிழ்முஸ்லிகளுக்கு இன்னொரு கட்சி உருவாகலாம். .நமக்கு நாமே எதிரிதிட்டம்.இஸ்லாமியசமூகம் மு ன்னேறும்?????????????????????????.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...