Pages

Sunday, October 11, 2015

நாங்கள்தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி: தமிமூன் அன்சாரி பேட்டி!

தஞ்சையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிமூன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
மனித நேய மக்கள் கட்சியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

ஜவாஹிருல்லா விடுத்த அறிக்கையில் மனித நேய மக்கள் கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தார்.

ஆனால் இன்று பெரும்பாலான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கொடியுடன் வந்து நாங்கள் தான் உண்மையான மனித நேய மக்கள் கட்சி என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழ் ஜவாஹிருல்லாவுக்கு முறைப்படி அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பொதுக்குழு கூட்ட மேடையில் அவருக்கு தனி இருக்கை போடப்பட்டு உள்ளது.

அவர் இந்த கூட்டத்துக்கு வந்தால் அதில் அமர்ந்து கொள்ளலாம். அவர் எங்களுடன் இணைந்து கட்சி பணியாற்ற முன் வந்தால் அதற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மனித நேய மக்கள் கட்சியின் சட்ட விதி 13–ன் படி தலைமை நிர்வாக குழு ஒப்புதலோடு பொது செயலாளர் தான் தலைமை பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இந்த விதிக்கு முரணாக மேற்கு தாம்பரத்தில் கடந்த 6–ந் தேதியன்று பொதுக்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தியவர்களை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கட்சி பொது செயலாளர், இணை பொது செயலாளர் ஆகியோரை நீக்கியதாக அறிவித்ததை கண்டிப்பதுடன் தமிமூன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் மீது முழு நம்பிக்கை வைத்து கட்சியை இன்னும் எழுச்சியுடன் வழி நடத்தி செல்லும் படி பொது செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

ஜவாஹிருல்லா எப்போதும் போல் கட்சி நிர்வாக குழுவோடு இணைந்து மீண்டும் கட்சி பணியாற்றி கேட்டுக் கொள்கிறது.

கட்சி வளர்ச்சி பணிகள், நிர்வாக சீர்திருத்தம், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்தல் ஆகிய பணிகளை தலைமை நிர்வாக குழு மேற்கொள்ள பொதுக்குழு அனுமதி தருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிமை கொலை செய்த அமைப்பை கண்டிப்பது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்தல் போன்ற நிகழ்வுகள் மனித உரிமைக்கு எதிரானது என்பதால் அதற்கு தடை விதித்த மாநில அரசுகள் தடையை நீக்க கேட்டுக் கொள்கிறோம்.

டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி வாடும் சூழ்நிலையை ஏற்படுத்தி தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்து காவிரி நீர் வழங்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்யும் கர்நாடக அரசை கண்டிப்பது.

இந்த பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் நிலையை உணர்ந்து செயல்பட மத்திய அரசை வலியுறுத்துவது.

தமிழகத்தில் மது விலக்கை அமுல்படுத்த மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. இதற்காக கடும் முயற்சி செய்து வருங்கால தமிழ் சமுதாயம் மது மயக்கமின்றி வாழ வழி வகுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த பாடுபடுவோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 

4 comments:

 1. திராவிடக்கட்சிகள் தான் தேர்தலுக்கு தேர்தல் உடைபடும் அதில் வல்லமைக்கொண்டவர் தான தலைவர். இஸ்லாமிய அமைப்புகளும் அவர்களின் வலையில் சிக்கியது. சிறுபான்மையர் ஓட்டை பிரிப்பதற்காக செய்யும் சூழ்ச்சி தான் போட்டி அமைப்பு. இவ்வாறு பிளவுபடுவதால் மாற்று மதத்தினருக்கு நாம் ஒரு கேலிக்கூத்தாக பார்க்கப் படுகிறோம் என்பதை எந்த தலைவனாவது பார்த்ததுண்டா? தொண்டன் தவறு செய்திருந்தாலும் அவனை அரவணைத்து செல்லவேண்டிய பண்பு தலைவனுக்கு இருந்தால் உடைபடுமா? பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை பேட்டி கொடுக்கும் நிலைமைக்கு சென்றது நல்லதல்ல. சமுதாய தலைவர்கள் சமரசத்தில் ஈடுபடவேண்டும்.

  ReplyDelete
 2. We will welcome you to lead the party and your patience to get vector.

  ReplyDelete
 3. Oru sahanukku aal irunthaal pothum naamum oru party entru ivanuva nammalai pirithu kuttichuvaraaki vittarkal.

  ReplyDelete
 4. Adirai Ahmad
  October 12, 2015 at 6:47 PM
  சாத்தான் ஓலமிட்டுச் சிரிக்கின்றான்!

  பேராசிரியர் அவர்களே! தமீம் அன்சாரி அவர்களே!
  காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களுக்குப் பிறகு, அக்கட்சியில் சிறந்த தலைமையொன்று இல்லாமல் போனதால், சுயநலவாதிகளும், பிரிவினைவாதிகளும், பேருக்காகத் தலைமையை ஏற்றவர்களும் வந்த அவல நிலை ஏற்பட்டபோது, 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' அந்த அவல நிலையைப் போக்குவதற்காகத் தோன்றியது. மகிழ்ச்சியடைந்தோம்.

  பின்னர் அதன் முன்னேற்றமாக ம. ம. க. எனும் அரசியல் கட்சி தோற்றுவிக்கப் பட்டபோது, தமிழ் முஸ்லிம் சமுதாயம் பூரிப்படைந்தது.
  இப்போது.......?

  உங்கள் இருவருக்கும் ஆதரவாக மக்கள் கூட்டம் தனித்தனியாக மாநாடுகளில் காட்சியளித்தபோது, வேதனைதான் ஏற்பட்டது! காரணம், இந்த இரு கூட்டங்களும் ஒட்டு மொத்தமாக நின்று, த.மு.மு. க. வின் ஆதரவாளர்களே என்று கண்டபோது, என்னைப் போன்றவர்களின் இதயத்தைப் பிழிந்தது. ஏன் இந்தப் பிரிவினை?

  காரணம் ego என்றால், அந்த ஒரு சொல்லை எடுத்துவிட்டு, இருவரும் ஒன்றாகினால், கட்சியின் பலம் உறுதியானதாகும். இரு தரப்பாரிடமும் valid reasons இருக்கின்றன என்றால், மீண்டும் ஒன்றாய் அமர்ந்து பேசுவதே நல்லது. இல்லாவிட்டால், கட்சிக்குப் பின்னடைவுதான் என்பதை நான் சொல்லித் தரவேண்டியதில்லை. ஷைத்தான் ஓலமிட்டுச் சிரிக்கின்றான்!

  எனவே, பொது நலனைக் கருதி, ஒற்றுமையாகுங்கள். இல்லாவிட்டால், தமிழகச் சட்ட மன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர்கூட இருக்க மாட்டார்!

  சென்ற தேர்தலில் பேராசிரியரான நீங்கள் வென்றீர்கள். அதே தேர்தலில், மிகக் குரிய ஒட்டு வித்தியாசத்தில், சகோ. தமீம் அன்சாரியாகிய நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தீர்கள்! இனி, அதுவும் இருக்காது!

  'உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்' என்று இரு சாராரும் தோப்புக்கரணம் போட்டுத் தோல்வியடைவீர்கள்! நினைவிருக்கட்டும்!
  ஒற்றுமையால் வெற்றியுண்டு; பிரிவினையால் பின்னடைவுதான்! இதை நான் சொல்லித் தரவேண்டியதில்லை; கல்வியில் உயர்நிலை அடைந்த நீங்கள் இருவருமே அறிவீர்கள்.

  பிரிவினையோடு இருந்து பிடிவாதம் செய்தால், மக்களின் மரியாதையையும் மதிப்பையும் இழந்துவிடுவீர்கள்! நினைவிருக்கட்டும்!

  - அதிரை அஹ்மத்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...