Pages

Wednesday, October 14, 2015

ஏமனில் இறந்த வீரக்குறிச்சி வாலிபரின் இல்லத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல் !

பட்டுக்கோட்டை அருகே உள்ள சுக்கிரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சவரிமுத்து. இவரது மகன் அந்தோனிராஜ் ( வயது 25), கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துபாயில் உள்ள ஒரு கம்பெணியில் ஆசாரி வேலைக்கு சென்றார். அவருக்கு அடுத்தமாதம் திருமணம் செய்வதாய் முடிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக துபாய் கம்பெணி அவரை ஏமன் நாட்டில் பணிக்கு அனுப்பினர்.

இந்நிலையில் அங்கு நடந்த குண்டு வெடிப்பில் பணியில் இருந்த அந்தோனிராஜ் பலியானார். இதையடுத்து இறந்த வாலிபர் அந்தோணிராஜ் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரும் முயற்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் z.முகம்மது இலியாஸ் தலைமையில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஆகியோர் அந்தோணிராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

மேலும்,அவர்களது உடலை இந்தியா கொண்டு வர முயற்சி எடுப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சியின் பட்டுக்கோட்டை தொகுதி தலைவர் ரஜினிஸ், எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயற்குழு உறுப்பினர் U.அப்துர் ரஹ்மான்,  எஸ்டிபிஐ அதிரை நகர தலைவர் ஏ.அஜாருதீன் மற்றும்  எஸ்டிபிஐ கட்சியின் வீரக்குறிச்சி நகர தலைவர் அருளப்பார்,  எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஹுசைன் மற்றும் SDTU மாவட்ட தலைவர் அமானுல்லாஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...