Pages

Monday, October 5, 2015

தண்ணீரில் தத்தளித்த பசுவை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த இஸ்லாமிய இளைஞர்!

கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் பாய்ந்து  மீட்டார்.

லக்னோவை சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது சகி, நேற்று இவர் வசிக்கும் பகுதியில் 35 அடி ஆழ கிணற்றுக்குள் பசு ஒன்று விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. ஆனால் யாரும் பசுவை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சிலர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அந்த சமயத்தில் மசூதி ஒன்றில் மதிய நேர தொழுகையை முடித்துக் கொண்டு, அந்த பகுதிக்கு வந்த முகமது சகி, கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த பசுவை கண்டார். உடனடியாக கிணற்றுக்குள் குதித்து பசுவை மீட்க முயற்சித்தார்.

மீட்கும் முயற்சியின் போது, பசு, அவரை வயிற்றில் எட்டி  உதைத்துள்ளது. இதில் முகமது சகிக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. எனினும் அவர் பசுவின் உடலை சுற்றி கயிற்றினை கட்டினார். பின்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு முகமது சகியும் பசுவும்  கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த பசுவை காப்பற்றிய இளைஞர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கிணற்றில் விழுந்த பசுவை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞருக்கு லக்னோ மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். முகமது சகியின் செயல் சமூக நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டு என்று ஆட்சியர் ராஜேசேகர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...