Pages

Sunday, October 11, 2015

அதிரை நகர தமுமுக-மமக நிர்வாகிகள் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை சந்தித்து வாழ்த்து !

சென்னை தாம்பரத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக அப்துல் சமது, பொருளாராக ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரசர்குளத்திற்கு வந்து இருந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை அதிரை நகர தமுமுக-மமக நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

1 comment:

 1. Adirai Ahmad
  October 12, 2015 at 6:47 PM
  சாத்தான் ஓலமிட்டுச் சிரிக்கின்றான்!

  பேராசிரியர் அவர்களே! தமீம் அன்சாரி அவர்களே!
  காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களுக்குப் பிறகு, அக்கட்சியில் சிறந்த தலைமையொன்று இல்லாமல் போனதால், சுயநலவாதிகளும், பிரிவினைவாதிகளும், பேருக்காகத் தலைமையை ஏற்றவர்களும் வந்த அவல நிலை ஏற்பட்டபோது, 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' அந்த அவல நிலையைப் போக்குவதற்காகத் தோன்றியது. மகிழ்ச்சியடைந்தோம்.

  பின்னர் அதன் முன்னேற்றமாக ம. ம. க. எனும் அரசியல் கட்சி தோற்றுவிக்கப் பட்டபோது, தமிழ் முஸ்லிம் சமுதாயம் பூரிப்படைந்தது.
  இப்போது.......?

  உங்கள் இருவருக்கும் ஆதரவாக மக்கள் கூட்டம் தனித்தனியாக மாநாடுகளில் காட்சியளித்தபோது, வேதனைதான் ஏற்பட்டது! காரணம், இந்த இரு கூட்டங்களும் ஒட்டு மொத்தமாக நின்று, த.மு.மு. க. வின் ஆதரவாளர்களே என்று கண்டபோது, என்னைப் போன்றவர்களின் இதயத்தைப் பிழிந்தது. ஏன் இந்தப் பிரிவினை?

  காரணம் ego என்றால், அந்த ஒரு சொல்லை எடுத்துவிட்டு, இருவரும் ஒன்றாகினால், கட்சியின் பலம் உறுதியானதாகும். இரு தரப்பாரிடமும் valid reasons இருக்கின்றன என்றால், மீண்டும் ஒன்றாய் அமர்ந்து பேசுவதே நல்லது. இல்லாவிட்டால், கட்சிக்குப் பின்னடைவுதான் என்பதை நான் சொல்லித் தரவேண்டியதில்லை. ஷைத்தான் ஓலமிட்டுச் சிரிக்கின்றான்!

  எனவே, பொது நலனைக் கருதி, ஒற்றுமையாகுங்கள். இல்லாவிட்டால், தமிழகச் சட்ட மன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர்கூட இருக்க மாட்டார்!

  சென்ற தேர்தலில் பேராசிரியரான நீங்கள் வென்றீர்கள். அதே தேர்தலில், மிகக் குரிய ஒட்டு வித்தியாசத்தில், சகோ. தமீம் அன்சாரியாகிய நீங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தீர்கள்! இனி, அதுவும் இருக்காது!

  'உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்' என்று இரு சாராரும் தோப்புக்கரணம் போட்டுத் தோல்வியடைவீர்கள்! நினைவிருக்கட்டும்!
  ஒற்றுமையால் வெற்றியுண்டு; பிரிவினையால் பின்னடைவுதான்! இதை நான் சொல்லித் தரவேண்டியதில்லை; கல்வியில் உயர்நிலை அடைந்த நீங்கள் இருவருமே அறிவீர்கள்.

  பிரிவினையோடு இருந்து பிடிவாதம் செய்தால், மக்களின் மரியாதையையும் மதிப்பையும் இழந்துவிடுவீர்கள்! நினைவிருக்கட்டும்!

  - அதிரை அஹ்மத்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...