Pages

Saturday, October 3, 2015

அதிரையில் ஹெல்மெட் அணியாமல் போலீசாரிடம் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் !

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த ஜூலை மாதம் 1 ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அதிரையில் ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்களின் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிரையில் மீண்டும் நேற்று மாலை முதல் 'ஹெல்மெட்’ அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை போலீசார் மடக்கி பிடித்து வருகின்றனர். இதில் இன்று இரவு வரை 100 க்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர். போலீசார் இவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் 'ஹெல்மெட்' கட்டாயம் அணிய அறிவுரை வழங்கினார்கள்.
* File Image

2 comments:

  1. ஹொல்மெட்தீர்ப்புஇன்னும்வரவில்லைகாவல்துறைபிடிப்பதுதவறு

    ReplyDelete
  2. தமிழகத்தில் வசூல் வேட்டை ஆரம்பம் ......பாத்து -போட்டு கொடுத்துட்டு போங்க சார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...