Pages

Friday, October 9, 2015

முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்டு தனியாரிடம் ஒப்படைப்பு !

முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர்(சின்னத்துரை நானா) மனைவி வாகிதா அம்மாள் (ஷாநவாஸ் தாயார்) இவருக்கு சொந்தமான 3.5 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட விவசாய சாகுபடி நிலம் முத்துப்பேட்டை அடுத்த செருப்பட்டாக்கரை கிராமத்தில் சாலை ஓரம் உள்ளது. இதனை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்ற விவசாயி வாகிதா அம்மாளிடமிருந்து குத்தகைக்கு எடுத்துக் கொண்டு சாகுபடி செய்து வந்தார். இதற்காக வாகிதா அம்மாளுக்கு ஒப்பந்தப்படி ஒரு சில வருடம் நெல்லும் வழங்கியுள்ளார். பிறகு வாகிதா அம்மாளுக்கு நெல் கொடுக்காததால் சந்தானத்திடமிருந்து இடத்தைத் திருப்பி கேட்ட போது அவர் மறுத்துள்ளார்.

இதனையடுத்து சுமார் 25 வருடங்களுக்கு முன்பு திருவாரூர், நாகை மற்றும் சென்னை ஆகிய நீதி மன்றங்களில் வாகிதா அம்மாள் வழக்கு தொடர்ந்தார். இதில் அனைத்திலும் வாகிதா அம்மாளுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் சந்தானத்திடமிருந்து அந்த நிலத்தை அவரால் மீட்க முடியவில்லை. அதன் பிறகு சில வருடங்களுக்கு முன்பு டெல்லி சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதிலும் வாகிதா அம்மாளுக்கே சாதகமாக அமைந்தது.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சந்தானம் இறந்ததால் அந்த விவசாய நிலத்தை அவரது மகன் திலீப் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஜோசப், மரியதாஸ் ஆகியோர் சாகுபடி செய்து வந்தனர்.

இந்த நிலையில் வாகிதா அம்மாள் மேற்படி நபர்களிடம் நிலத்தை திருப்பி கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த வாகிதா அம்மாள் நிலத்தில் சம்பா சாகுபடி சட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு செய்தனர். தற்பொழுது பயிர் வளர்ந்து நெற்கதிர்கள் தெரிந்து வந்தது.

இதனையடுத்து வாகிதா அம்மாள் முன்பு சென்னை மற்றும் டெல்லி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்ததை காட்டி மன்னார்குடி வருவாய் கோர்டில் சமீபத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதில் வாகிதா அம்மாளுக்கு சொந்தமான இடத்தை வருவாய் துறை அளவீடு செய்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து நேற்று காலை செருப்பட்டாக்கரை கிராமத்திற்கு மன்னார்குடி வருவாய் நீதிமன்ற அமலாக்க ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் முத்துப்பேட்டை வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் கமலதியாகராஜன் மற்றும் வருவாய் துறையினர் சென்று வாகிதா அம்மாளுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தனர். இதற்கு பாதுகாப்பாக முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு திலீப் மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகளை திரும்ப செல்ல வேண்டும் என்றும் செல்லவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்திவோம் என்றும் கூச்சலிட்டனர்.

இதனை அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை. பின்னர் சாலை மறியல் செய்யவும் முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நீதி மன்ற உத்தரவுபடி தற்பொழுது அளவீட்டு செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தடுத்தால் உங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் இடத்தை முழுவதும் அளவீடு செய்து முடித்து இடத்தின் செர்ந்தாரரான வாகிதா அம்மாளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரது உறவினர்கள் போலீசார் மற்றும் வருவாய் துறை பாதுகாப்புடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களை கொண்டு 3.5 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்களை பல மணி நேரம் உழுது அழித்து நிலத்தை கையகப்படுத்தினர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...