Pages

Friday, October 9, 2015

ஏரி நீர் நிரம்பி பிலால் நகர் குடியிருப்பில் புகுந்தது !

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள எரிபுறக்கரை ஊராட்சி பகுதியில் உள்ள ஏரியில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நீர் நிரம்பி காணப்பட்டது. இந்நிலையில், ஏரியில் இருந்த தண்ணீர் வெளியேறி, அருகில் உள்ள தாழ்வான பிலால் நகர்  குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறியதாவது; ஏரியின் வடிகால் பகுதிகளை முறையாக பராமரிக்காததால், ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வாக உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில், தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வேண்டும். ஏரியின் வடிகாலை தூர் வார வேண்டும். இவ்வாறு கூறினர்.

படங்கள்:
1. ஏரி நீர் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் பிலால் நகர் குடியிருப்பு பகுதி
2. தேங்கியுள்ள ஏரி நீரில் இந்த பகுதியின் பள்ளி சிறுவர்கள் நீந்தி செல்லும் காட்சி
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...