Pages

Saturday, October 10, 2015

உயிருக்கு போராடும் ஏழை மாணவிக்கு லண்டன்வாழ் அதிரையர் ₹15,000/- உதவி !

அதிரை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு ஏரிக்கரை சாலையில் வசிப்பவர் நல்லத்தம்பி. இவரது இரண்டாவது மகள் ரம்யா (20). கடந்த வருடம் முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது இடுப்பு பகுதியில் கட்டி உருவானது. மருத்துவரிடம் கொண்டு சென்று இரண்டு முறை அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 5 கிலோவிற்கு மேல் எடையில் காணப்படும் கட்டியால் மாணவியின் உடல் நிலை மிகவும் மோசமாகி கொண்டே வருகிறது.

மாணவியின் கால், கைகள் மற்றும் உடலும் மெலிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் மானவி ரம்யா தனது இயற்கை உபாதைகளை தனியாக சென்று கழிக்கக்கூட முடியாத அளவில் சிரமபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக அதிரை நியூஸ் பங்களிப்பாளரும், பிரபல பத்திரிக்கை நிருபருமாகிய முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து நேரடியாக மாணவியின் இல்லத்திற்கு சென்று மாணவியின் பரிதாப நிலையை அறிந்து ஊடகம் மூலம் செய்தியை கொண்டுசென்று உதவ முடிவு செய்தார். இதையடுத்து மாணவியின் உடல் நிலை குறித்து பிரபல பத்திரிகை தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதிரை நியூஸிலும் செய்தி வெளியிடப்பட்டது.

அதிரை நியூஸ் செய்தியை பார்வையிட்ட பிரபல தொழில் அதிபரும், அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ நிதிஉதவிகளை தொடர்ந்து செய்து வருபவருமான எவர் கோல்டு உரிமையாளர் பழஞ்சூர் கே. செல்வம் அவர்கள் வழங்கிய ₹10,000/-த்தை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் அவர்கள் நேரடியாக மாணவியின் இல்லத்திற்கு சென்று வழங்கினார்.

இந்த நிலையில் லண்டன் வாழ் அதிரையரும், தொடர்ந்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ நிதிஉதவிகளை தொடர்ந்து செய்து வருபவருமான சமூக ஆர்வலர் எஸ்ஏ இம்தியாஸ் அஹமது உயிருக்கு போராடி வரும் மாணவியின் பராமரிப்பு செலவினங்களுக்கு உதவ முன்வந்தார். இவர் அனுப்பிய ₹15,000/-த்தை முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் மாஷா மாலிக், தமுமுக அதிரை நகர துணைச்செயலாளர் முஹம்மது தமீம், மமக இணைச்செயலாளர் இத்ரீஸ் அஹமது, தமுமுக மருத்துவ அணி பொறுப்பாளர் அசாருதீன், மாணவரணி பொறுப்பாளர்கள் நூருல் ஹக், ராஜிக் அஹமது மற்றும் 'நிருபர்' மொய்தீன் பிச்சை ஆகியோர் மாணவியின் இல்லத்திற்கு சென்று வழங்கினார்கள். உதவியை பெற்றுக்கொண்ட மாணவியின் குடும்பத்தினர் உதவியளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...