Pages

Friday, October 2, 2015

அதிரையில் திடீர் மின்தடையால் பொதுமக்கள் அவதி !

அதிரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் திடீர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

அதிரையில் இயங்கி வரும் கல்லூரி, பள்ளிக்கூடங்களும், வர்த்தக நிறுவனங்களுக்கு வாரந்தோறும் வெள்ளிகிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும். பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் இன்றைய தினத்தில் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். இஸ்லாமியர்களுக்கு முக்கிய தினமாக கருதிவரும் இன்றைய தினத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

மின்தடை ஏற்பட்டது தொடர்பாக அதிரை மின்சாரவாரிய தரப்பில் விசாரித்த வகையில்...
'பட்டுக்கோட்டை சாலை கரிசமணி குளத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் திடீரென சாய்ந்து கீழே விழுந்ததால், இந்த மின்கம்பம் வழியே அதிரையின் பிற பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 3 மணிக்குள் மின்இணைப்பு வழங்கப்படும்' என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...