Pages

Tuesday, October 6, 2015

அதிரை பைத்துல்மால் சார்பாக ஏழைகளுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் !

வழக்கம் போல் அதிரை பைத்துல்மால் சார்பில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஹஜ் பெருநாளையொட்டி அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வாழும் ஏழை எளியோருக்கு குர்பானி இறைச்சிகள் வழங்கப்பட்டது.

அதிரை பைத்துல்மால் சார்பில் குர்பானி இறைச்சி விநியோகிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. என்னுடைய இக்கருத்து குறைகாணும் நோக்கில் அல்ல மாறாக முறைப்படுத்தப்பட்ட குர்பானி கறி விநியோகத்திற்கு முன்திட்டமிடல்களை அனைத்து இயக்கத்தினரும் மேற்கொள்ள வேண்டியே!

    இங்கே அதிரை பைத்துல்மாலின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால், இந்த அறிக்கையை ஒட்டியே என் கருத்துக்களை பதிந்திருந்தாலும் அனைத்து இயக்கத்தையுமே சுட்ட விரும்புகிறேன்.

    நான் புரிந்து கொண்ட அடிப்படையில், ஒரு பங்கு 5 கிலோ பாக்கெட் என விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ? இத்துடன் மற்ற இயக்கத்தவர்களின் பல பங்குகளும் அதே குடும்பத்திற்கு சென்றிருக்கக்கூடும் அல்லவா? அப்படி என்றால் இது வீண்விரயமல்லவா? மேலும் கையிலிருக்கும் கறியை எப்படியாவது கொடுத்துக் கழித்தால் போதும் என்ற மனநிலையை பிரதிபலிப்பதாக தெரியவில்லையா? உழ்கிய்யாவின் நோக்கம் இதுவல்லவே.

    முறையாக விநியோகம் செய்ய முடியாதவர்கள் வீம்புக்கு செய்வதைவிட ஒதுங்கிக் கொள்ளலாமே! அல்லது பெருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பே முஹல்லாவாரியாக கணக்கெடுத்து வைத்துக் கொண்டும், ஒற்றுமையுடன் செயலாற்ற முன்வரும் இயக்கங்களை சேர்த்துக் கொண்டும், ஒரே குடும்பத்திற்குள் கறிகள் போய் குவியாமல் அதிரையிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கலாமே!

    குறைந்தபட்சம், பைத்துல்மால் உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு விநியோகம் செய்யப்படும் ஏரியாக்களை வருடாவருடம் சுழற்சி முறையில் பிரித்துக் கொள்ளலாம்.

    என் கருத்தில் பிழையிருப்பின் விளக்கம் தருக! வசவு மொழிகளை தயவுசெய்து சகோதரர்கள் தவிர்க்கவும்.

    ReplyDelete
  2. Masha Allah. Nalla karutthu, aanal yaar poonaikku mani kattuvathu?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...