Pages

Monday, October 5, 2015

மன்னை எக்ஸ்பிரஸில் இருட்டில் பயணம் செய்த பயணிகள்!

மன்னை விரைவு ரயிலின் 3 பெட்டிகளில் விளக்குகள் எரியாமல் இருட்டில் பயணம் செய்த பயணிகள் சீர்காழி ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடியிலிருந்து - சென்னைக்கு மன்னை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. ரயில் நீடாமங்கலம் அருகே வந்தபோது ரயிலின் எஸ் 1,எஸ் 2,எஸ் 3 ஆகிய மூன்று பெட்டிகளில் இருந்த விளக்குகள் எரியவில்லை.

இதுகுறித்து பயணிகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும், விளக்குகள் சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ரயில் பெட்டியில் இருட்டில் பெண்கள், குழந்தைகளோடு பயணம் செய்த பயணிகள் கழிவறைக்குகூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

ரயில் சீர்காழி ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.20 வந்து நின்றவுடன், அங்கும் விளக்குகள் சீர் செய்யப்படாததால் ஆத்திரமுற்ற பயணிகள் சுமார் 200 பேர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ரயில் ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக 1.43 மணிக்கு புறப்பட்டு சென்றது.

ரயில் விழுப்புரம் சென்றதும் விளக்குகள் சீரமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...