Pages

Wednesday, October 14, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா !

அதிராம்பட்டினம், அக் 14,
ஆங்கில இலக்கிய மன்ற 2015 - ஆம் ஆண்டின் துவக்க விழா காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் ஆங்கிலத் துறையினரால் இன்று புதன்கிழமை 14.10.2015 சிறப்பாக நடத்தப்பட்டது.

முதலாம் ஆண்டு எம்.ஏ ஆங்கிலம் படிக்கும் மாணவி ஆர்.நாகஜோதி அனைவரையும் வரவேற்றார். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் அ.முகம்மது முகைதீன், அவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து சிறப்பு விருந்தினரை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

விழாவிற்கு காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ. ஜலால் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். துணை முதல்வர் டாக்டர். ஏ.எம். உதுமான் முகைதீன் பாராட்டுரை வழங்கினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளின் புலத்துறைப் பேராசிரியர் டாக்டர் வி. வினோத் குமார் அவர்கள் உலக மொழியான ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தையும், தகவல் தொடர்புக்கு அது எந்த அளவு எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியும், ஒப்பியல் நோக்கில் ஆய்வு செய்த நுணுக்கமான கருத்துக்களை பேராசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பகிர்ந்து கொண்டார். மொழியையும், இலக்கியத்தையும் நம் இரு கண்களைப் போல பாதுகாத்து வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் எனவும், ஆங்கிலத்தில் உள்ள நவீன நுணுக்கங்களை கறறுக் கொண்டால், ஆங்கிலத்தை தவறாக பேச வேண்டிய அவசியமே ஏற்படாது என்று கூறினார். மேலும் கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் திறனை மேம்படுத்துவதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திப் பேசினார்.

மேலும் டாக்டர்.வி.வினோத் குமார் அவர்கள் மனித நேயத்தோடு வாழ்வதற்கு இலக்கியங்கள் எவ்வாறு நமக்கு வழிகாட்டுகிறது என்பதை இந்தியாவில் இருக்கும் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளின் மூலமாக வாழ்வியல் தத்துவத்தை   இங்கிலாந்தின் பெட்ரன்ட் ரஸ்ஸல் என்ற நோபல் பரிசு வாங்கிய அறிஞரின் படைப்புகளை சுட்டிக்காட்டி விளக்கினார்.

விழா நிகழ்ச்சிகளை முதலாம் ஆண்டு எம்.ஏ ஆங்கிலம் படிக்கும் மாணவி கே.ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். இரண்டாம் ஆண்டு எம்.ஏ ஆங்கிலம் படிக்கும் மாணவன் சி.ஐயப்பன் நன்றியுரை கூறினார்.

பல்வேறு போட்டிகளான ஆங்கிலப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டி, எழுத்துப் போட்டி, வாசித்தல் போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...