Pages

Thursday, October 1, 2015

துபாய் ஜிடெக்ஸ் ஷாப்பிங் - ஒரு முன்னோட்டம் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பிரசித்தி பெற்ற, பிரம்மாண்ட IT & மின் தொடர்பு சாதனங்களின் சில்லறை வர்த்தக பொருட்காட்சியான GITEX SHOPPER பொருட்காட்சி Dubai World Trade Centre ல் எதிர்வரும் 03-10-2015 முதல் 10-10-2015 வரை நடைபெறவுள்ளது.

இந்த பொருட்காட்சியில் அமீரகத்திலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் பிரபலமான பல்வேறு BRANDED வர்த்தக நிறுவனங்கள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளன. இவற்றில் கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பிரிண்டர்கள், புரோஜக்டர், டேப்லெட்கள், டிவி மற்றும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள புதிய சாதனங்கள் என அனைத்துவகை எலக்ட்ரானிக் பொருட்களும் கிடைக்கும் அத்துடன் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. இவற்றுடன் ஏகப்பட்ட SURPRISE பரிசுகளுடன் திடீர் விலை குறைப்பு ஆஃபர்களும் அவ்வப்போது விற்பனையாளர்களால் அறிவிக்கப்படும்.

சுமார் 30,000 மேற்பட்ட பல்வேறு விதமான IT & ELECTRONIC பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. வருடா வருடம் துபை அரசின் அனுசரணையுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி தினமும் காலை 11 மணியளவில் துவங்கி இரவு 11 மணிவரை நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் 30 திர்ஹம். 5 வயது வரை குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 14 வயது வரை குழந்தைகள் பெற்றோர் / காப்பாளர் இன்றி தனியே வர அனுமதியில்லை. இந்நிகழ்ச்சிக்கு மிக எளிதாக வந்து செல்ல DUBAI WORLD TRADE CENTER STATIONக்கு மெட்ரோ சர்வீஸ் உள்ளது.

அதிரை அமீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...