Pages

Friday, October 9, 2015

தஞ்சையில் திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை திமுகவினர் பங்கேற்பு !

காவிரி டெல்டா விவசாயிகள் நலன் காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கோ.சி.மணி, டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழநிமாணிக்கம், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், நகர செயலாளர் நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி, சட்ட திட்டக்குழு உறுப்பினர் இறைவன், மாநில மகளிரணி துணை தலைவர் காரல் மார்க்ஸ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ஜித்து, மாநில பிரசாரக்குழு உறுப்பினர் கார்குழலி முன்னிலை வகித்தனர்.

காவிரி பாசன நீர் பெற்றுத்தர முயற்சி எடுக்காத தமிழக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மறுக்க மத்திய அரசையும், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பது. தஞ்சை கடைமடை பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை பகுதிகளில் இன்று வரை பாசனநீர் வழங்காதது. நெல் குவிண்டால் ரூ.2 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதிரையிலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம், ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், வார்டு பொறுப்பாளர் நிஜாமுதீன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...