Pages

Tuesday, October 20, 2015

சாதிக்க துடிக்கும் இளைஞர் !

இன்றைய உலகம் அதீத வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் இளைஞர்களின் பங்கு மிகப் பெரியதாகும். காரணம் எதையும் செய்து முடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் துணிவும் ஒரு இளைஞனிடம் இருப்பது தான்.

அந்த வகையில் நாம் தற்போது பார்க்க போகும் இளைஞர் சென்னையை சேர்ந்தவர். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் சுப்ரமணியன் ( வயது 25 ) இவர் CARESOFT GLOBAL என்ற கம்பெனியில் பணி புரிகிறார். கடந்த 2015 பிப்ரவரி மாதம் இவரால் என்ற DRAG BARS அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு முதலில் BIKERS CLUB ஆக ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் இது NGO ACTIVITIES காக மாற்றபட்டது. இந்த அமைப்பு தற்போது பல சமூக சேவைகள் செய்து வருகிறது.

இதுகுறித்து கிஷோர் சுப்ரமணியன் அவர்கள் நம்மிடம் கூறியதாவது:
DRAGBARS என்ற அமைப்பு துவங்கும் போது நான் மட்டும் தான் இருந்தேன். நாளடைவில் இந்த அமைப்பில் சில இளைஞர்கள் இணைந்தார்கள். இந்த அமைப்பு ஒரு பைக்கர்ஸ் கிளப்-பாக தான் இருந்தது.எங்களுக்குள் ஒரு ஆசை வந்தது நாங்கள் எதாவது நல்லது செய்ய வேண்டும்.அப்படியே நாங்கள் இந்த அமைப்பை NGO-வாக மாற்றம் செய்தோம்.

தற்போது சென்னையில் பல பகுதிகளில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, இரத்ததான விழிப்புணர்வு பேரணி,மரம் வளர்ப்போம் கருவேல மரத்தை அளிப்போம், MISSION 2020 போன்ற  விழிப்புணர்வு பேரணி நாங்கள் செய்து வருகிறோம்.மேலும் நாங்கள் இது போன்ற கல்லூரி மாணவர்கள் , பொது சேவை செய்யும் அமைப்புடன் இணைந்து செய்கிறோம்.

தற்போது எங்கள் அமைப்பில் 150-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.இறுதியாக ஒன்றை மட்டும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்:

தலைக்கவசம் என்பது ஏதோ ஒரு ஆடம்பரத் தேவை இல்லை அது அதி வசியமானது, பாதுகாப்பான பயணத்திற்கு உதவுவது.சாலை விபத்துக்கள் பற்றிய புள்ளி விவரங்களின் படி," இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படுகின்ற மரணம் ,பெரும்பாலும் தலை காயத்தினால் ஏற்படுகின்றது என்பது தெரிய வருகிறது".

இவை எல்லாம் தெரிந்திருந்தும் நம்மில் இன்னும் பலர் தலைக்கவசம் அணிவதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்கள் .எது எவ்வாறாகினும்  ஒன்றை மட்டும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் ஆகும். தலைக்கவசம் அணிந்தால் வியர்வை கொட்டலாம், உங்கள் சிகை அலங்காரம் கலையலாம் ஆனால் பொன்னான உங்கள் உயிர் பாதுகாக்கப்படும் என்பதை மட்டும் மறவாதீர்கள்.

நிறைவாக வாகனம் ஓட்டிச் செல்லும் உங்களை நம்பி உங்கள் தாயாரோ, மனைவியோ, குழந்தைகளோ  வீட்டில் காத்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஆசையும் எதிர்காலத்தையும் பாழாக்கிவிடாதீர்கள். இதுவரை தலைக்கவசம் அணியாதவர்களும் இப்போதிருந்து தலைக்கவசம அணியத் துவங்குவீர்கள் என நம்புவோம் என்றார்.

இன்றைய இளைஞர்கள் திரை நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும் தங்கள் கனவு நாயகர்களாக பாவித்துக்கொண்டு அவர்களுக்கு துதிபாடுவதும், கட் அவுட்கள் வைப்பதும், தங்களின் புகைப்படத்திற்குப்பதில் அவர்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முகம் தொலைத்த மனிதர்களாக இருப்பதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது..

சினிமாவையும், விளையாட்டையும் ரசிப்பதில் எந்த தவறும் இல்லை.. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டுதான் கதாநாயகன் சினிமாவில் நடிக்கிறான் என்பதையும், விளையாட்டு வீரன் விளையாடுகிறான் என்பதையும் இவர்கள் ஏன் உணரவில்லை..

அவர்கள் நட்சத்திரங்களாக மின்னுவதற்கு நீ துணை போகிறாயே.. உன் வாழ்கையில் நீ மின்னுவது எப்போது..

சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே.. கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக இளமை முடிந்துபோகும்...

ஒன்று உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்க்காகவும் உழையுங்கள் அல்லது சமூகத்திற்காகவாவது உழையுங்கள்..

வரலாற்றுப் பக்கங்களில் உக்களுக்கென ஓர் வரியையாவது எழுதிவிட்டுச் செல்லுங்கள்' என்றார்.

பரிந்துரை: 
N.காலித் அஹ்மத் 
CBD தஞ்சை மாவட்ட செயலாளர்
தொடர்புக்கு:8056394348 

1 comment:

  1. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியவில்லை என்றால், ஆவணங்களை பறிமுதல் செய்யலாம்.பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிவதில் விலக்கு கிடையாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது இந்த சமூக ஆர்வலர் கிஷோர் சுப்ரமணியனுக்கு தெரியாதா?.பைக் பின் இருக்கையில் உள்ளவரின் தலையில் தலைகவசம் இல்லை இது என்ன விழிப்புணர்வு பேரணி? ஆர்வக் கோளாறால் செய்கிறார்களா ? அல்லது ஆபத்தை நோக்கி செல்கிறார்களா?.

    ஹெலம்ட் போடாமல் செல்வதால் மட்டும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி மடிகிறார்கள் என்பது எல்லாம் அபத்தம். நமது நாட்டில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல முறையான பாதைகளை அமைத்து உள்ளார்களா ? ஹெல்மட் போடுவதால் மட்டும் அவர்களின் உயிருக்கும் மற்ற உறுப்புகளுக்கும் உத்ரவாதம் தர முடியுமா ?... சாலையோரக் காவல் துறையினர் சட்டத்தின் படி நடந்தால் கோர்ட் உத்தரவு அமல்படுத்துவது சாத்தியம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...