Pages

Saturday, October 3, 2015

இதுக்கு எப்படி தலைப்பு கொடுத்தாலும் தகும் (பொருந்தும்)அதிரையின் அன்பு மிக்க அதிரையர்களே, உங்களுக்கு பல வேலைகள் இருந்தாலும், அதை அப்படியே ஜஸ்ட் ஓரங்கட்டிவிட்டு இந்தப் பக்கம் இப்படி இங்கே வாருங்க.

இங்கே அழைப்பது ஆண்களை மட்டும்தானா என்றறொரு கேள்வி பெண்கள் மத்தியில் வந்தால், பெண்களாகிய நீங்கள்! தகப்பன் அல்லது கணவன் ஆகியோரின் துணையோடு வந்தால் நல்லது, அல்லது சமூகத்தில், மார்கத்தில், உங்களுடைய தகப்பன் அல்லது கணவன் ஆகியோர்கள் அனுமதிக்கப்பட்ட தகுந்த துணையோடு வந்தால் நல்லது.

02/10/2015- சனிக்கிழமை அன்று காலை சரியாக (09.15) மணிக்கு, கரிசை மணிஏரியில் 1975-ம் வருடம் நடப்பட்ட உயர் அழுத்த மின் கம்பங்களில் மூன்று உயர் அழுத்த மின் கம்பங்கள் (11KV) சொல்லி வைத்தார் போல் ஒவ்வொன்றாக மூன்றும் சாய்ந்து விட்டது.

காரணம், இரண்டு நாட்கள் நல்ல மழை, ஏரியிலும் கணிசமான தண்ணீர், மிகவும் பழமையான மின் கம்பங்கள்.

இதன் காரணத்தால் அதிரை நகரும், அதை சுற்றி உள்ள பகுதிகளும் மின்சாரம் இல்லாமல் பரிதவித்தது.

பிறகு மாலை சரியாக நான்கு மணியளவில், நமதூரை அடுத்துள்ள கிராமமாகிய கருங்குளம் பகுதியிலிருந்து லூபிங் முறையில் 11KV-உயர் மின் அழுத்த மின்சாரத்தை லூபிங் செய்து அதிரை நகருக்கு மட்டும் இரவு 09.00 மணிவரை மின் விநியோகம் கொடுக்கப்பட்டது.

இந்த லூபிங் முறையில் விநியோகிக்கப்பட்ட நேரத்தில் அதிரையில் பல பகுதிகள் மின் விநியோகம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டது. அதில் ஒன்று பிலால் நகர், இந்த பிலால் நகர் பல நேரங்களில், பல விஷயங்களில் புறந்தள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிறகு, சரியாக அன்றிரவு 09.45 மணிக்கு அதிரை நகரும் அதை சுற்றி உள்ள பகுதிக்கும் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்பட்டது.

முன்னதாக, நான் கரிசைமணி ஏரியில் உள்ள மின் கம்பங்கள் குறித்து பல சமயங்களில் மின் வாரிய அதிரை அதிகாரியாகிய திரு.பிரகாஷ் A.E., அவர்களை பல முறை சந்தித்து கூறி உள்ளேன்.

அதிரை மின் வாரிய அதிகாரி, AE-யாக இருப்பவர் திரு பிரகாஷ் அவர்கள். இவர் நம்மலைபோல் ஆறறிவை உள்ளடக்கிய ஒரு மனிதர், நமதூரில் ஆறாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றார். இவர் இளம் துடிப்புள்ள நல்ல மனிதர்.

கடந்த மூன்றாண்டுகளாக அதிரையில் இவரின் சேவை மிகவும் மந்தமான நிலையில் இருப்பதாக அதிரையர்கள் பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன்.

காரணம் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அதிரையிலும், மற்ற நாட்களில் நாடியம் என்ற ஊரிலும் பணியாற்றி வருகின்றார்.

அதிரைக்கு என்று.
AE கிடையாது.
லைன் மேன் கிடையாது.
போர்மேன் கிடையாது.
போதுமான வேலையாட்கள் கிடையாது.
சரியான ரீடிங் எடுப்பவர் கிடையாது.

அதிரையில்.
தினமும் கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையான விஷயம்.
பல இடங்களில் மின்கம்பங்கள் மோசமான நிலையில் இருக்கின்றது.


மின் வாரிய சம்பத்தப்பட்ட பலப் பிரச்சனைகளை அதிரை மக்கள் அனுதினமும் சந்தித்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் அதிரை மின் வாரியத்தின் செயல் பாடுகள் மிக மிக மோசம்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

4 comments:

 1. இந்த பிரச்சினையயை ஜமால்காக்கா போன்றவர்கள் அரசின் கவனத்துக்கு முறைப்படி கொண்டுபோய் தீர்வு காண முயற்சிக்கலாமே.

  ReplyDelete
 2. ஜமால் காக்கா அவர்களுக்கு திரு பிரகாஸ் அவர்களை ரொம்ப புகழ வேண்டாம் சென்ற 4 மாதங்களுக்கு முன்பு ஜாவியாலுக்கு முன்புரம் உள்ள மின் கம்பங்களில் தெருவிளக்கு பொருத்த மின் கம்பி இழுக்க பேரூராட்சி செய ல் அலுவலர் மூலம் அனுப்ப பட்ட கோரிக்கைக்கு எவ்வித நட வடிக்கை எடுக்காத இவர் துடிப்பானவரா?

  ReplyDelete
 3. ஜமால் காக்கா அவர்களுக்கு திரு பிரகாஸ் அவர்களை ரொம்ப புகழ வேண்டாம் சென்ற 4 மாதங்களுக்கு முன்பு ஜாவியாலுக்கு முன்புரம் உள்ள மின் கம்பங்களில் தெருவிளக்கு பொருத்த மின் கம்பி இழுக்க பேரூராட்சி செய ல் அலுவலர் மூலம் அனுப்ப பட்ட கோரிக்கைக்கு எவ்வித நட வடிக்கை எடுக்காத இவர் துடிப்பானவரா?

  ReplyDelete
 4. அம்மா; தமிழக வளர்ச்சிக்கு மைல் கல்லா இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை , ஆனா தடை கல்லா இருக்காங்க மின்தடை மூலமா ...பதவிக்கு வந்த நாலு வருசத்தில் ஒரு மெகா வாட்டு அனல் மின்சாரத்துக்கு கூட திட்டம் தீட்டி அமுல் படுத்தாமல் உள்ள ஒரே அரசாங்கம் அம்மா அரசாங்கமாகத்தான் இருக்கும்; இதுல மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று சொல்லி தம்பட்டம் அடிச்சிக்கிறாங்க; எதுக்கெல்லாம் பேருவைக்கிரவங்க " அம்மா மின் தடை " என்று வைத்தாலும் பரவா இல்லை.

  ஆள் பற்றாக்குறைன்னு லிஸ்ட் போட்டு இருந்தாலும் கலக்ட்சன் அதிகமாக உள்ள ஊரு நம்மவூருங்க; தமிழ்நாடே இருட்டில் இருக்கும்பொழுது நமக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...