Pages

Thursday, October 29, 2015

தமீமுன் அன்சாரி நடத்திய கூட்டத்தில் அதிரை சர்புதீன் பங்கேற்பு !

தமீமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் தாஜூதீன், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாநில இளைஞர் அணி செயலாளர் சமீம் அகமது கலந்து கொண்டனர். இதில் ஆஸ்திரேலியா வாழ் அதிரையர் சர்புதீன் மற்றும் இவரது நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்னதாக தமீமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

மனிதநேய மக்கள் கட்சி மிகுந்த உற்சாகத்தோடு களத்திலே புதிய உறுப்பினர்களையும், மக்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மனிதநேய மக்கள் மிகப்பெரிய அரசியல் கட்சியாக செயலாற்றி வருகிறது. அதனுடைய நோக்கங்களில் ஒன்றாக திருவாரூர் மாவட்டத்திலே மாவட்ட அளவில் இன்றைக்கு கூட்டம் நடைபெறுகிறது.

கட்சியில் கருத்து வேறுப்பாட்டிற்கான வாசலை திறந்து வைத்திருக்கிறோம். ஆனால் எதிர் தரப்பினர்களிடமிருந்து இதுவரை அதற்கான பதில் வரவில்லை. அதனால் நாங்கள் எங்கள் பணிகளை முன்னெடுத்துக் செய்து கொண்டிருக்கின்றோம். நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் எங்கள் கட்சி நாடியிருக்கிறது. விரைவில் சட்ட பூர்வமாக எங்கள் தலைமையில் இயங்கும் எங்கள் கட்சிக்குதான் சாதகமாக தீர்ப்பு வரும்.

சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டனி என்பது குறித்து டிசம்பர் இறுதியில் தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவு அறிவிக்கும். பருப்பு விலை உயர்ந்ததற்கு இந்தியாவில் சூதாட்ட வியாபாரிகளின் கையில் இந்த வணிகம் சிக்கி உள்ள காரணத்தால்தான் இப்படிப்பட்ட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து பருப்பு விலையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

காவேரி பிரசச்னைகளில் விவசாயிகளே சுப்ரீம் கோர்டை நாடியதற்கு மத்திய அரசின் கையாலாத தனம்தான் காரணம். இதற்கு பலனை தேர்தல் நேரத்தில் மத்திய அரசு அனுபவிக்கும். ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதற்கான பலன் போகபோகதான் தெரியும்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஹரியானாவில் இரண்டு தலீத் குழந்தைகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து சொல்லும்போது நாயின் மீது கல் எறிந்தால் அது என்ன செய்யும் என்று கூறி மனிதாபிமானமற்ற நிலையில் ஒரு மத்திய அமைச்சர் பேசியிருப்பது நாட்டில் அனைத்து தரப்பு மக்களையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எனவே பிரதமர் மோடி அமைச்சர் வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இலங்கையிலே நடந்த ஈழப்பிரச்சனையில் போர் குற்றம் நடந்தது குறித்து இலங்கை அரசு விசாரணையில் தெளிவுப்படுத்தியுள்ளது இது குறித்து இந்திய அரசு தெளிவடைந்து இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் நட்பு நாடு என்று காப்பாற்றாமல் ஈழ தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்திலே முத்துப்பேட்டை மற்றும் கூத்தாநல்லூரைத் தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக மனிதநேய மக்கள் கட்சி வழியுறுத்தி வருகிறது. தமிழக அரசு இந்த கோரிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை முதல் திருத்துறைப்பூண்டி வரை உள்ள அகல ரயில் பாதை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ரயில் போக்கு வரத்து இல்லாததால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு உடனடியாக பணியை விரைந்து முடிக்க வேண்டும். தவறினால் எங்கள் இயக்கம் சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினார்.

படம் 1: முத்துப்பேட்டையில் செய்தியாளர்களுடன் பேசிய போது
படம் 2: முத்துப்பேட்டை கொய்யா மகாலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தின் படங்கள்
படம் 3: முத்துப்பேட்டை ஆதரவாளர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம்
படம் 4: செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியா வாழ் அதிரையர் சர்புதீன் அவர்கள்
 

2 comments:

  1. தேர்தல் மூலம் உறுப்பினர்கள் நிர்வாக தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் - இணைந்து செயல் பட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து சமுதாய பணி செய்ய முன்வாருங்கள். பதவி - பணம் பித்து பிடித்து சமுதாயத்தை கூர் போட வேண்டாம்.

    ReplyDelete
  2. நல்ல தொடக்கம், ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து குடிசை தொழில் போல் கட்சி ஆரம்பித்தால், அதிலும் தொப்பி தாடி சகிதம் ஆரம்பித்தால் சமுதாயத்திற்கு நல்ல தொண்டாற்றலாம். எப்படியாவது மைக் பிடிக்கவேண்டும் என்னும் பெரும் எண்ணம் கொண்ட பேரு மக்கள், கவனத்தில் கொண்டு உடனடியாக செயல் பட வேண்டும். இன்றைக்கு சமுதாயத்திற்கு தலை போகிற காரியம் இதுதான் !. சம்மந்த பட்டவர்கள் விரைந்து செயல்பட வேண்டி கொள்கிறேன்.

    பின் குறிப்பு :
    போஸ்டர் , லெட்டெர் பேடு செலவு குறைவுதான், அது கூட வெளிநாடு வாழ் சகோதரர்களின் தயவில் நிறைவேறிவிடும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...