Pages

Sunday, October 4, 2015

சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது அதிரை ப்ரண்ட்ஸ் அணி !

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ESC ] சார்பாக 7 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி நமதூர் காட்டுப்பள்ளி மைதானத்தில் நேற்று இரவு சிறப்பாக துவங்கியது.

இதையடுத்து பல்வேறு அணிகள் பங்குபெற்ற பகல் மற்றும் இரவு நேர ஆட்டங்கள் நடைபெற்றன. இன்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை ப்ரண்ட்ஸ் அணியும் , கீரமங்கலம் அணியும் விளையாடியது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதை போல் விறுவிறுப்பாக ஆடினார். ஆட்ட இறுதியில் அதிரை ப்ரண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம், கீழத்தெரு சங்க நிர்வாகி மான் நெய்னா முஹம்மது, சமூக ஆர்வலர் அப்துல் ஹலீம், அமீரக கீழத்தெரு நிர்வாகி ஜியாவூதின், மீன் மார்க்கெட் தாஜுதீன், விளையாட்டு வீரர் ஜஹபர் அலி, சேக்தாவூது, அஜ்மல்கான், மல்ஹர்தீன் மற்றும் ESC நிர்வாகிகள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் முதல் இடம் பிடித்த அதிரை ப்ரண்ட்ஸ் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த கீரமங்கலம் அணிக்கும் ரொக்கத்தொகை, கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் தொடர் போட்டிகளில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம், கீழத்தெரு சங்க நிர்வாகி மான் நெய்னா முஹம்மது, சமூக ஆர்வலர் அப்துல் ஹலீம், அமீரக கீழத்தெரு நிர்வாகி ஜியாவூதின், விளையாட்டு வீரர் ஜஹபர் அலி, ESC நிர்வாகிகள் உள்ளிட்டோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

விழா முடிவில் நிர்வாகி ESC நிர்வாகி பைசல் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சிறப்பாக செய்து இருந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...