Pages

Thursday, October 1, 2015

பட்டுக்கோட்டையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குசாவடி முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று மாலை பட்டுக்கோட்டை ராஜா மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தேர்தல் பொறுப்புகுழு உறுப்பினர்கள் து.செல்வம், லண்டன் வி.கோவிந்தராஜ், சன். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்து கலந்துரையாடப்பட்டன.

கூட்டத்தில்,  பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் மனோகரன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஆர்.இளங்கோ, பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மேற்கு ஒன்றிய செயலாளர் பா. ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டத்தில், அதிரையிலிருந்து திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதிகள் அப்துல் ஹலீம், முல்லை மதி, பேரூர் துணை செயலாளர் தில்லைநாதன், வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், ஜே.ஜே சாகுல் ஹமீது, நெய்னா முஹம்மது, பகுருதீன், இப்ராஹீம், கவுன்சிலர்கள் நூர்லாட்ஜ் செய்யது, முஹம்மது செரிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...