Pages

Friday, October 9, 2015

தஞ்சையில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி!

தஞ்சாவூர் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகள் நலன் காக்கவும் அவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பேரணியை ரயில்வே நிலையத்திலிருந்து மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் கலந்து கொண்டார்.

இன்று சர்வதேச பெண் குழந்தை தினம் இன்றும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.  பெண் குழந்தைகளின் நலன் காக்கவும், சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து விழிப்புணர்வு பேரணியினை மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி பேரணியில் கலந்து கொண்டார்கள்.  இப்பேரணி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கீழராஜ வீதி உள்ள அரசு பெண்கள் மேனிலைப்பள்ளில் சென்றடைந்தது.  இப்பேரணியில் திரளாக பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும், அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக நடைபெற்ற விழாவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப் பட்டது.

இப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கு.பரசுராமன் (தஞ்சாவூர்) திரு.ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), திரு.இரா.துரைக்கண்ணு (பாபநாசம்) மாண்புமிகு மாநகர மேயர் திருமதி.சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் திரு.பண்டரிநாதன்  நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் திரு. துரை வீரணன், இராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரு.கோவி.மனோகரன், கடகடப்பை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஜெ.ஏ.செந்தில்வேலன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.க.கஸ்தூரி, குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி.சி.திலகவதி, சமூக நலத்துறை அலுவலர் திருமதி.கலைச்செல்வி, சைல்ட் லைன் இயக்குநர் திரு.பாத்திமாராஜ், மதர்பவுண்டேசன் தலைவர் திரு.சவரிமுத்து, விவேகானந்தா குழந்தைகள் இல்ல மேலாளர் திரு.பாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கண்காணிப்பாளர் திருமதி.ஷீபாஹெலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...