Pages

Friday, October 9, 2015

அதிரையில் புதிய புரட்சி சிங்கங்கள் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

அதிரையில் புதிய புரட்சி சிங்கங்கள் கட்சியின் சார்பில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்காவை கண்டித்து, தமிழகத்திற்கு காவேரியில் வழங்க வேண்டிய உரிய மழைநீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதிரை பேரூராட்சியை நகராட்சியாக மாற்றக்கோரியும், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு ஆகிய பகுதிகளில் மீனவர்கள் நலன்கருதி உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தக்கோரியும், அதிரை பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு புதிய புரட்சி சிங்கங்கள் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ம.புகழேந்தி கண்டன உரை ஆற்றினார்.
பொன். ரவிச்சந்திரன், லட்சுமணன், சுப்பிரமணியன், சுதாகர், சதிஸ், சிலம்பு சோம செந்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் பா. தேவா நன்றி கூறினார். இதில் புதிய புரட்சி சிங்கங்கள் கட்சியின் மகேந்திரன், ராஜவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...