Pages

Saturday, October 10, 2015

சாலை வசதி அமைத்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகம் திடீர் முற்றுகை !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு பெரிய தைக்கால் தெரு பகுதியிலிருந்து ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் இந்த பகுதியில் புதிதாக சாலை அமைத்து தர வலியுறுத்தி இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகை இட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அப்பகுதியின் பெண்கள் கூறியதாவது...
'தொடர் மழையால் எங்கள் பகுதி மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இதனால் பால் வண்டி முதல் அன்றாடம் பயன்படும் அத்திவாசிய பொருட்கள் எங்கள் பகுதிக்கு கொண்டு வருவதில் வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக எங்கள் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், காலதாமதமானால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்' என எச்சரித்தனர்.

இதுதொடர்பாக பேரூராட்சி அலுவலக தொடர்புடையவர்களிடம் விசாரித்த போது...
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டு பெரிய தைக்கால் தெரு பகுதியிலிருந்து ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க திரு என் ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 1,60,000/- மதிப்பீடு செய்து பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ 115,000/- நிதி தேவைப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் திரு என் ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ சார்பில் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்புதல் பெற்றவுடன் விரைவில் பணி தொடங்கி விடும்' என தெரிவித்தனர்.
 
 
 

1 comment:

  1. அடிப்படை வசதி செய்து தரக்கோரி பெண்களே போராட வந்துவிட்டார்கள் ஆனால் அப்பகுதி வார்ட் மெம்பெர் என்ன செய்தாருன்னு தெரியவில்லை. அடிக்கடி முறையிட்டும் அதிகாரிகள் ஆவன செய்கிறேன்னு சொல்லி காலத்தை போக்கிவிடுவார்கள் மக்களும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வைத்த கோரிக்கைகள் மறந்தும் விடுகிறார்கள் மறதி என்பது அது ஒரு தேசிய வியாதி. தேர்தல் காலம் நெருங்குவதால் கோரிக்கை நிறைவேற வாய்ப்புண்டு ஆனால் அடுத்த மழையில் ரோடு காணாமல் போய்விடும். அதனால பிளாஸ்டிக் ரோடு போடுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...