Pages

Tuesday, October 13, 2015

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்பில அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: பொதுவாக குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை நாம் எப்படி பார்க்கிறோம், சமுதாயம் எப்படி பார்க்கிறது என்றால் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாகவே பார்க்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்பது அவ்வாறு இல்லை.  குழந்தைகள் ஆண், பெண் என்ற பாகுபாடுகள் கிடையாது. அனைத்து குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களுக்கு எதிராக பணி செய்வது நமது கடமையாகும்.
 
பாதுகாப்பான சூழ்நிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தருவது முதலில் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் கடமையாகும்.   சமுதாயம் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் கடமைகளையும் செய்ய வேண்டும். மூன்றாவதாக அரசு பணி செய்யும் அலுவலர்கள்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புடன் கடமையை செய்ய வேண்டும்.

குழந்தை பாதுகாப்பு என்று வைத்துக் கொண்டால் குழந்தைகளின் உரிமையை முதலாவதாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து மற்றும்  சுகாதாரம், கல்வி, திருமண வயது வரை பாதுகாத்தல் ஆகியவைகள் அடிப்படை உரிமையாகும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி தகவல்கள் முதலாவதாக அப்பகுதி பணி செய்யும் கிராம நிர்வாக அலுவலருக்கும், பள்ளி ஆசிரியருக்கும், பகுதி மருத்துவர்களுக்கு தெரிய வரும். முதலில் நாம் நினைப்பது எந்தவொரு குற்றமாக இருந்தாலும் சுமூகமாக பேசி முடித்தவிடலாம் என நினைக்கின்றோம். அது போல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நினைக்காமல் காவல் நிலையங்களுக்கு சென்று புகார் தெரிவிக்க வேண்டும்.  காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவித்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்ற தவறான மனநிலை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். புகார் தெரிவிக்கும் குழந்தையை எதிரான மானப்பான்மையுடன் பார்க்கின்ற எண்ணத்தை நாம் மாற்றி கொள்ள வேண்டும்.  இவ்வாறு புகார் தெரிவிக்காத பட்சத்தில் குற்றம் புரிந்தவர் சமுதாயத்தில் சுலபமாக நடமாடிக்கொண்டிருப்பார்.  எனவே நாம் அடுத்தடுத்து குற்றங்கள் நடக்காத வண்ணம் காவல் நிலைங்களுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டும்.  

தஞ்சாவூர் மாவட்டம், குற்றங்கள் குறைவாக உள்ளது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.  நமது மாவட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் சதவிகிதம்  1035 பெண்களுக்கு 1000 ஆண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. அதே போல் 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளை கணக்கிட்டால் அது 957 பெண்களுக்கு 1000 ஆண்கள் என்ற விகிதத்தில் உள்ளது.  இதை பார்க்கும் பொழுது பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்பதை காட்டுகிறது.

பொதுவாக குழந்தை இறப்பு குறித்து நாம் ஆய்வு செய்யும் பொழுது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இதர காரணங்களால் இறந்துவிட்டனர் என வைத்துக் கொண்டாலும்ää முழுமையாக ஆய்வு செய்யும் பொழுது பெண் குழந்தைகளுக்கு எதிரான  மனநிலையே உள்ளது.  இது போன்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.  பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உயர வேண்டும்.  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை புகார் வரை கொண்டு சென்று தண்டனை வாங்கி தருவது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் நாம் செய்கின்ற கடமையாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.தர்மராஜன், தொழிலாளர் ஆய்வாளர் திரு.பாஸ்கரன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.திவ்யா, திருவையாறு அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எம்.செந்தாமரை செல்வி,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.க.கஸ்தூரி, பாதுகாப்பு அலுவலர் திரு.என்.ரஞ்சித், சைல்டுலைன் இயக்குநர் திரு.பாத்திமாராஜ் மற்றும் காவல் துறையினர், அரசு அலுவலர்கள், மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...