Pages

Thursday, October 8, 2015

குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போன் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் போன் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்தது. திடீர் மொபைல் புரட்சியின் விளைவாக சாதாரன மக்களின் கைகளிலும் ஸ்மார்ட் போன் தவழ தொடங்கிவிட்டன.

வீட்டிணைப்பு தொலைபேசிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்க, தவழும் குழந்தைகளும் பேசக்கூட ஆரம்பித்திருக்காத குழந்தைகளும் தங்களின் பெற்றோரின் செல்பேசிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு விட்டன.

"இணையம் சீரான முறையில் பரவலாக்கப்படாவிட்டாலும், ஸ்மார்ட் போன் போன்ற கையடக்கச் சாதனங்கள் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. 'உள்ளங்கையில் உலகம்' என்கிற விஷயம், 'நாள் முழுவதும் இணையம்' என்னும் பாங்குக்கும், தவறான வழிகாட்டுதல்களுக்கும் முதன்மைக் காரணியாக இருக்கிறது", என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சி பல நன்மைகளைக் கொடுத்தாலும் வாழ்க்கையை எளிமையாக்கினாலும், அது பலருடைய வாழ்க்கையைக் கெடுத்தும் வருகிறது. இதில் நிறையப் பேர் நேரத்தை வீணடித்து விடுகிறார்கள். தவறான விஷயங்களை எளிதாகச் செய்யும் அளவுக்குக் குற்ற விஷயங்கள் இதனால் பெருகியுள்ளன.

இதெல்லாம் ஒருபுறம் என்றால் வீட்டில் எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் அதை விடுத்து பெற்றோர்கள் ஏதோ நினைப்பில் குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போனை கொடுப்பதால் அவர்கள் அதில் செய்யும் சில விளையாட்டுக்கள் வினையாகிப் போவதை நாம் அறிவதில்லை.

தற்போது மிக விரைவாக தகவல்களை பகிர்ந்துகொள்ளும் வாட்ஸ் அப் சமூக தளங்களையும் ஸ்மார்ட் போன்கள் மூலம் பல குழந்தைகள் உபயோகிக்கக் கற்றுக் கொண்டுள்ளன.

நம் கையில்தானே இருக்கின்றன என்கிற தைரியத்தில் ஸ்மார்ட் போன்களில் வீட்டுப் பெண்கள், வயதுக்கு வந்த பெண்கள் என நம் இஷ்டத்திற்கு புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர். ஆனால் சில குழந்தைகள் அவர்களே அறியாமல் அதுபோன்ற படங்களை பிற அந்நியர்களுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். இதனால் எப்பேற்பட்ட விபரீதங்கள் விளைவுகள் உள்ளன என்பதை நாம் அறிவதில்லை.

சில குழந்தைகள் வாட்ஸ் அப்பில் இருக்கும் வாய்ஸ் ரெக்கார்டை ஆன் செய்துவிடுகின்றனர். அதில் வீட்டில் பேசிக்கொள்ளும் பல ரகசியங்கள் பல குழுக்களுக்கு குழந்தைகளால் பரப்பப்பட்டு விடுவதை பலர் அறிவதில்லை.

விபரம் அறிந்த பெரியவர்களே சில நேரங்களில் ஸ்மார்ட் போனில் உள்ள சில ஆப்ஷன்களை உபயோகிக்கத் தெரியாமல் பிறருக்கு தன் ரகசியங்களை அனுப்பி வைத்துவிடும்போது, குழந்தைகள் கையில் ஸ்மார் போன் இருந்தால் சொல்ல வேண்டுமா?

எனவே எச்சரிக்கையுடன் செயல்பட்டு குழந்தைகள் கையில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்தே இப்பதிவின் நோக்கம்.

-இப்னு ஹசன் 

1 comment:

  1. அழாதே கண்ணா என்று சொல்லி கிளுகிளுப்பைக் காட்டினாலும் அழுவும் குழந்தை அழுகை நிற்பாட்டுவதில்லை ரிங்க்டோன் கேட்டவுடன் அதன் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் ( அதனால தான் தாய்மார்களுக்கு இலவசமாக அம்மையார் மொபைல் போன் கொடுத்துள்ளார்...)

    தமிழனுக்கு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிய பழக்கம் இப்போ ஸ்மார்ட் போனில் தடவுகிறான் இதனை காணும் குழந்தைக்கு அதன் மேல் ஆசை; குழந்தை தொல்லை படுத்தினால் லேப்டாப்பில் ரைம்ஸ் காட்ட வேண்டியுள்ளது... இந்தப் பழக்கத்தால் பார்க் போகுவதில்லை; கேம்ஸில் மூழ்குவதால் எடையும் கூடுகிறது. பெரும்பாலும், குழந்தைகளைக் கெடுப்பதே பெற்றோர்கள்தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று முன்னோர் சொன்னதை நினைத்து தான் பார்க்க வேண்டும். குழந்தையின் நலமா ? ஸ்மார்ட் போனா?.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...