Pages

Saturday, October 3, 2015

வானவேடிக்கையுடன் துவங்கியது மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி!

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ESC ] சார்பாக 7 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி நமதூர் காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று இரவு 8 மணியளவில் சிறப்பாக துவங்கியது.

துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் எம்எம்எஸ் சேக் நசுருதீன், துணை தலைவர் பிஎம்கே தாஜுதீன், செயலாளர் ம.செ ஜபருல்லா, சமூக ஆர்வலர் அப்துல் ஹலீம், அமீரக கீழத்தெரு நிர்வாகி ஜியாவூதின், அமீரக டியா தலைவர் அப்துல் மாலிக், அஜ்மல்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்ஹெச் அஸ்லம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறிது நேரம் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் சமூக ஆர்வலர் மான் சேக் வரவேற்று பேசினார்.

இன்றைய முதல் நாள் காட்சி ஆட்டத்தில் அதிரை ப்ரண்ட்ஸ் அணியும், டெர்ரிவியர் அணியும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் அதிரை ப்ரண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அதிரை ப்ரண்ட்ஸ் அணிக்கு சிறப்பு பரிசாக மான் சேக் வழங்கிய ரூ 1000 ம் மற்றும் மீன் மார்க்கெட் தாஜுதீன் வழங்கிய ரூ 500 வழங்கப்பட்டது.

இதில்  சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், கால்பந்து பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி, குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டதை வென்ற முன்னாள் வீரர் ஜஹபர் அலி ஆகியரோடு ESC நிர்வாகிகள் ஆகியோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து காட்சி ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

துவக்க விழா நிகழ்ச்சியில் விழா குழுவினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 10 நிமிடங்கள் நீடித்த வானவேடிக்கை நிகழ்ச்சியை பார்வையாளர்களாக கலந்துகொண்ட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சிறப்பாக செய்து இருந்தது.

மின்னொளியில் இரவு நேர ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சார்ந்த தலைசிறந்த அணிகள் விளையாடஆட உள்ளனர். நாளை நடைபெற இருக்கின்ற இறுதி போட்டியில் வெற்றி பெறும் சிறந்த அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...