Pages

Monday, October 5, 2015

சென்னையில் பறக்கும் ரயில் தடம் புரண்டு விபத்து! (படங்கள்)

சென்னையில் பறக்கும் ரயில் கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இன்று நண்பகல் 12.45 மணிக்கு பறக்கும் ரயில் புறப்பட்டு சென்றது. கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அவசரம் அவசரமாக ரயிலில் இருந்து குதித்தனர். இந்த விபத்தால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து, ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ரயிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் பறக்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...