Pages

Tuesday, October 20, 2015

அதிரை அருகே டேங்கர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து !

அதிரை அடுத்துள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற ஆயில் டேங்கர் லாரியும் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் டேங்கர் லாரியும் அரசு பேருந்தும் முன் பகுதி முழுவதும் சேதமாகியது. இந்த விபத்தில் இரண்டு டிரைவர்களும் பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள்
நிருபர் மொய்தீன் பிச்சை, 
முத்துப்பேட்டை

 
 
 
 
 
 
 

1 comment:

  1. எண்ணெய்; தரைக்கீழ் கொட்டலன்னு சிலருக்கு வருத்தம்! குடிபோதையில் வந்த டிரைவர் யாருன்னு தெரிந்து லைசென்சே கட் பண்ணிடுங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...