Pages

Thursday, October 8, 2015

தஞ்சையில் உலக தன்னார்வ இரத்ததான தின விழிப்புணர்வு பேரணி! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சாவூர் உலக தன்னார்வ இரத்ததான தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்ற  பேரணி முக்கிய வீதிகள் வழியாக அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் சென்றடைந்தது.

தொடர்ந்து இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இரத்ததானம் கொடையாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நற்பணி மன்றங்கள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
ஒவ்வொரு நாளும், ஒவ்வொருத்தரையும் வாழ்த்துகின்றோம். வாழ்த்துகளை பெறுகின்றோம். இருப்பினும் மனதளவில் உள்ளன்போடு இரத்ததானம் செய்பவர்களை வாழ்த்துவதில் பெருமை அடைகின்றேன்.  இரத்ததானம் வழங்கியவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருந்து பலருடைய உயிரை காக்குகின்ற உங்களுக்கு உங்களை அறியாமல் பல்வேறு நன்மைகள் வந்து சேரும்.  இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இரத்த கொடையாளர்கள் பணி இன்றியமையாததது.

மேலும். அதிக அளவில் இரத்த தானம் வழங்க கேட்டுக் கொள்கின்றேன். அடிப்படையில் சேவை மனப்பான்மை இருந்ததால் தான் இது போன்ற நல்ல காரியங்கள் செய்ய முடியும்.  அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தை அனைவரும் மனதில் ஏற்று செயல்பட வேண்டும்.  இரத்த தானம்; ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான ஒரு செயல்  ஆகும். இரத்ததானத்தால் பல பேர் உயிர் வாழ்க்கின்றனர்.  அனைவருடைய நன்மைகளும் இரத்ததானம் செய்பவர்களுக்கு வந்து சேரும். இரத்ததானம் செய்து புண்ணியத்தை தேடி செல்லும் அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

விழாவில் இரத்ததானம வழங்கிய நபர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.மா.சிங்காரவேலு, வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரன், இரத்தவங்கி அலுவலர் டாக்டர் அரவிந்த், டாக்டர் ராதிகா மைக்கேல், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மாதவன், இந்திய செஞ்சுலுவை சங்க செயலாளர் திருமதி.வசந்தா கோவிந்தராஜன், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வின், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, பயிற்றுனர் திரு. துளசி துரை மாணிக்கம், மற்றும் தன்னார்வ இரத்த கொடையாளர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...