Pages

Thursday, October 8, 2015

முத்துப்பேட்டை அருகே அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தை மீட்பு !

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடக்காட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர் வர்த்தக்கழக துணைச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆஸ்திரேலியா நாட்டின்; அரிய வகை ஆந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதனை அதே பகுதியைச் சேர்ந்த நாய்கள் கூட்டமாக கூடி ஆந்தையை துரத்தி துரத்தி கடித்தது. இதனைக் கண்ட கண்ணன் நாய்களை விரட்டிவிட்டு ஆந்தையை உயிருடன் மீட்டார்.

பின்னர் நேற்று காலை முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் கங்காசூடன் ஆந்தைக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் முத்துப்பேட்டை வனத்துறை அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரின் உத்தரவுப்படி வனஊழியர் செல்வகுமாரிடன் அரிய வகை ஆந்தையைக் கண்ணன் ஒப்படைத்தார். பின்னர் வனத்துறையினர் மீட்கப்பட்ட அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தையை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் விட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...