Pages

Tuesday, October 6, 2015

செய்னாங்குளத்தில் படர்ந்து காணப்படும் முட்புதர்கள் அகற்றும் பணி தீவிரம் !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.

பல ஆண்டுகளாக குப்பை கழிவுகளாலும், கழிவு நீராலும் சூழப்பட்டு துர்நாற்றம் வீசி வந்த குளத்திற்கு விடிவுகாலம் பிறந்ததை கண்டு இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் குளத்தை சுற்றி ஏராளமான கருவமுள் மரங்கள் மளமளவென வளர்ந்து குளம் தெரியாத அளவிற்கு மண்டிக்காணப்பட்டது. படர்ந்து காணப்படும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களின் உத்தரவின் பேரில் குளத்தை சுற்றி படர்ந்து காணப்படும் முட்புதர்களை அகற்றும் பணிகளில் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் நேற்று முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் பார்வையிட்டார். 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...