Pages

Monday, October 19, 2015

அதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு !

நமதூர் இளைஞர்களுக்கு எப்போதும் ராயல் என்பீல்டு பைக் மீது தனி மவுசு இருக்கும். லைப் ஸ்டைல் இமேஜ் எப்போதும் இருப்பதால் தொடர்ந்து அதை வாங்குகின்றனர். குடும்பத்தினரோடு செல்பவர்களோ, ஷாப்பிங் செல்லவோ இந்த பைக்கை வாங்குவோர் ரொம்ப கம்மிதான். வித்தியாசமான ரசனையுள்ளோரே இந்த பைக்கை விரும்பி வாங்குவார்கள்.

புதிய பைக் வாங்குபவர்கள் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீலர்களிடம் முன்பதிவு செய்து ஆறு மாதங்கள் வரை காத்திருந்த பின்னரே பைக் டெலிவரி செய்யப்படுகிறது. அதிரை இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு பைக் பயன்படுத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது.

அதிரையில் உலாவரும் ராயல் என்பீல்டு பைக்குகளின் புகைப்படங்களின் தொகுப்பு:
 
 
 
 
புதிய மாடலாக வந்துள்ள புல்லட்டில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பிரமாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜெக்டர் லைட்டுடன் புதிய ஹெட்லைட் முன்பக்கத்தை அழகாக்கிறது. இரட்டை குடுவை டயல்கள். ஒன்று டிஜிட்டல், மற்றொன்று அனலாக். டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பது போன்று வார்னிங் லைட் சுவிட்ச் உள்ளது. இந்த ஸ்விட்சை தட்டினால் காரில் உள்ளதுபோல் ஒரே நேரத்தில் நான்கு இன்டிகேட்டர் லைட்டுகளும் அணைந்து, அணைந்து எரியும்.

உயரமானவர்கள் மட்டுமின்றி உயரம் குறைவானவர்களும் ஓட்டும் வகையில் புதிய தண்டர்பேர்டு இருக்கை உயரமும் குறைக்கப்பட்டுள்ளது. எடை 195 கிலோ. சிசி 499. இன்ஜன் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிலேட்டரை முறுக்கினாலே வேகம் பிய்த்து கொண்டு போகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்துக்கு செல்லலாம். இரண்டு வீல்களிலும டிஸ்க் பிரேக் உள்ளது. வீல் பேஸ் 20 மி.மீ. பழைய பைக்கிலிருந்து குறைக்கப்பட்டு இருப்பதால் வளைவுகளில் எளிதாக ஓட்ட முடியும். லிடடருக்கு 30 கி.மீ. மைலேஜ் தரும் என்கிறார்கள் என்பீல்டு பிரியர்கள். இதன் விலை ₹ 1.40 லட்சத்தை தொடும்.

குறிப்பு: எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள்  ராயல் என்பீல்டு பைக்குகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் பதிவில் இணைக்கப்படும்.  

9 comments:

 1. adirai news some times no use.
  யாரு வண்டி வச்சிருந்ததா, மக்களுக்கு என்ன பயனை தரப்போகுது, அதிரைநியூஸ் உங்களுடைய தராதரத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

  ReplyDelete
 2. Royal Enfield bike is better than other types of bikes. But no need to upload photos with user's pics. Thanks.....

  ReplyDelete
 3. ethellam oru news endru poduringa.....chi chi

  ReplyDelete
 4. Ithula irukura yarum youth kidayathu

  ReplyDelete
 5. இது எல்லாம் ஒரு செய்தியா அதிரை நீயுஸின் தரம் குறைந்து கொண்டே போகுதே...?

  ReplyDelete
 6. Buhari kaka kudutha comment thookitiyalae y

  ReplyDelete
 7. கட்டாய தலைக்கவச சட்டம் அமலில் உள்ள நிலையில்...

  ReplyDelete
 8. அதிரை நியூஸ் என்ன அதிரையின் சப் ஏஜன்டா?
  எப்படி பார்த்தாலும் இதே விளம்பரமா இருக்குது.இவர்களிடம் மட்டும் இல்லை,இன்னும் பலரிடமும் உள்ளது.அவர்கள் போட்டோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...