Pages

Friday, October 23, 2015

வாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் படுகாயம் !

 
நேற்று காலை தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் 10 மாணவர்கள் தலா இருவர் வீதம் 5 இருசக்கர வாகனங்களில் அமர்ந்து இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை ஈசிஆர் சாலை வழியாக ஊர் திரும்பினார்கள். 

வாகனங்கள் இராமநாதபுரம் அடுத்துள்ள திருப்பாலைக்குடி அருகே வந்தபோது வளைவில் எதிரே சென்ற குட்டி யானை வாகனத்தை முந்திச்செல்ல முற்படும்போது இருசக்கர வாகனம் குட்டி யானை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மாணவனுக்கு தொடையில் எலும்பு முறிவும், வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த மற்றொரு மாணவனுக்கு தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக தகவலறிந்த கல்லூரி பேராசிரியர், பள்ளி முதல்வர் - ஆசிரியர் பெருமக்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பலத்த காயங்கள் அடைந்த இரண்டு மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை உடனிருந்து செய்துகொடுத்தனர். சிகிச்சை முடிந்து மாணவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை இராமநாதபுரம் மருத்துவமனையில் முகாமிட்டு இருந்தனர்.

இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்ட அனைத்து மாணவர்களும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், இவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரியவந்துள்ளது. பயணம் மேற்கொண்ட மீதமுள்ள மாணவர்களின் நலன் கருதி, ஓட்டிவந்த இருசக்கர வாகனங்கள் பேராசிரியரால் பறிமுதல் செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் மாற்று வாகனத்தில் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுற்றுலா சென்ற மாணவர்கள் அனைவரும் தாங்கள் படித்து வரும் பள்ளி மற்றும் பெற்றோர் ஆகியோரின் அனுமதியின்றி தன்னிச்சையாக இருசக்கர வாகனங்களில் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு சுற்றுலா சென்றது தெரியவந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் வாகன விபத்துகளில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள்-பெற்றோர்கள் ஆகியோர் பங்கு பெரும் 'வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு' நிகழ்ச்சிகளை அந்தந்த பள்ளிகளின் சார்பில் அல்லது ஊரில் இயங்கும் அனைத்து பள்ளிகளின் சார்பில் ட்ராஃபிக் போலீசார், பேராசிரியர்கள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அதிரைவாழ் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 comments:

  1. இத்தனைக்கும் காரணம் அவர்களின் பெற்றோர்கள்தான்.கண்டிப்பு இல்லாத வளர்ப்பும்,சிறுவயதிலேயே அவர்களுக்கு இருசக்கரவாகனத்தை வாங்கிகொடுப்பதும் முக்கியகாரணம்.

    ReplyDelete
  2. இத்தனைக்கும் காரணம் அவர்களின் பெற்றோர்கள்தான்.கண்டிப்பு இல்லாத வளர்ப்பும்,சிறுவயதிலேயே அவர்களுக்கு இருசக்கரவாகனத்தை வாங்கிகொடுப்பதும் முக்கியகாரணம்.

    ReplyDelete
  3. காசு இருக்கிற திமிரு அதான் ஊரு சுத்த சொல்லுது. கேட்டால் எங்க அப்பன் துபையில் சம்பாதிக்கிறாரு என்று சொல்லுவான். பாவம் அவர் அங்கே என்னா பண்ணுறாரு என்று இந்த நாதாரிக்கு தெரியாது அவன் ஆத்தா காரிக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் காசை கொடுத்து ஊரு சுத்த அனுப்பி இருப்பாளா. பட்டால் தான் புத்தி வரும். இனியாவது திருந்துங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...