Pages

Wednesday, October 7, 2015

தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை TNTJ அமைப்பினர் பங்கேற்பு !

உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி இருந்ததாக கூறி இராணுவ வீரரின் தந்தையை அடித்துக் கொன்ற கும்பலை தண்டிக்க கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டதின் சார்பாக இன்று காலை தஞ்சை இரயிலடி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு டிஎன்டிஜே மாவட்ட தலைவர் ஹெச் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் டிஎன்டிஜே மாநில செயலாளர் பா. அப்துர் ரஹ்மான் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தவ்ஹீத் ஜமாத்தினர் கலந்துகொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டுக்கறி உணவை சாப்பிட்டனர்.

முன்னதாக தவ்ஹீத் ஜமாத்தினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தக்வா பள்ளி அருகிலிருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விருப்பத்தின் பேரில் சொந்தமாக எடுத்து வந்த வாகனங்கள் ஆகியவற்றில் திரளானோர் போராட்ட களத்திற்கு பயணத்தை மேற்கொண்டனர்.
 

 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...