Pages

Sunday, October 18, 2015

WSC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி - பரிசளிப்பு நிகழ்ச்சி !

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] சார்பாக 15 ஆம் ஆண்டு மாநில அளவில் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி மேலத்தெரு மைதானத்தில் நேற்று சிறப்பாக தொடங்கியது.

இதையடுத்து பல்வேறு அணிகள் பங்குபெற்ற பகல் மற்றும் இரவு நேர ஆட்டங்கள் நடைபெற்றன. இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் அதிரை WSC அணியும், ஈரோடு கொங்கு அணியும் விளையாடியது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதை போல் விறுவிறுப்பாக ஆடினார். ஆட்ட இறுதியில் ஈரோடு கொங்கு அணி வெற்றி பெற்றது.

முன்னதாக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், 'சமூக ஆர்வலர்' அப்துல் ஹலீம் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை துவக்கி வைத்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக முஹம்மது சுல்தான், மல்ஹர்தீன், ஜாஹிர் உசேன், மாஜுதீன், சகாபுதீன், ஜஹாங்கீர், ஜாஃபர் அலி, அன்வர், புரோஸ்கான், அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் முதல் இடம் பிடித்த ஈரோடு கொங்கு அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த அதிரை WSC அணிக்கும் ரொக்கத்தொகை, கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவற்றை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், 'சமூக ஆர்வலர்' அப்துல் ஹலீம், முஹம்மது சுல்தான், அப்துல் வாஹித், அப்துல் ஹலீம் ஆகியோர் வழங்கினர். மேலும் தொடர் போட்டிகளில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சிறப்பாக செய்து இருந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான விளையாட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...