Pages

Monday, November 2, 2015

சென்னையில் நவம்பர் 14-15 தேதிகளில் UEF தொழில் மாநாடு: பங்கேற்க அழைப்பு !

UNITED ECONOMIC FORUM (UEF) அமைப்பின் ஏற்பாட்டில், தொழில் மாநாடு (TRADE SUMMIT) சென்னை ITC GRAND CHOLA ஹோட்டலில் நடைபெறவுள்ளது. UEF மாநாட்டு குழுவில் அதிரையின் பிரபல தொழில் அதிபரும், சிபோல் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமாகிய அல்ஹாஜ் எம்எஸ் தாஜுதீன் அவர்கள் உட்பட பிரபல தொழில் நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள் பலர் அங்கம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 14 - 15 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உட்பட உலகளவில் பிரசித்தி பெற்ற பல முக்கிய நபர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டின் மூலம், பின்தங்கிய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் வடிவமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் மேலும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மூலம் - இவ்வமைப்பின் உறுப்பினர் நிறுவனங்களுக்கு, 10,000 கோடி ரூபாய் அளவிலான தொழில் மேம்பாட்டுக்கான முயற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UEF மாநாட்டு குழு உறுப்பினர்கள்
 
மாநாட்டில் கலந்துரையாடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள்
 மாநாட்டில் பேச அழைப்பு விடப்பட்டுள்ள முக்கிய நபர்கள்
 மாநாட்டு அரங்க அமைப்பு
 மாநாட்டு அரங்கில் - தொழில் நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கலாம்
 மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தனி நபர்களுக்கான படிவம்
மாநாட்டில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி





UNITED ECONOMIC FORUM (UEF) அமைப்பு சென்னையில் 1979ம் ஆண்டு துவக்கப்பட்டது. கீழக்கரையை சார்ந்த மறைந்த தொழிலதிபர் ஹாஜி பி.எஸ்.அப்துர் ரஹ்மான், இவ்வமைப்பின் நிறுவனர். தற்போது இவ்வமைப்பில் 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஹாஜி பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் மூன்றாவது மகனும், COASTAL ENERGEN குழுமத்தின் அதிபருமான அஹமது ஏ.ஆர்.புஹாரி, UEF அமைப்பின் தலைவராக தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாடு குறித்து வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை (BROCHURE) காண http://ueftradesummit.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

இந்த மாநாட்டுக்கு என வெளியிடப்பட்டுள்ள இணையதளம் முகவரி www.ueftradesummit.com

UNITED ECONOMIC FORUM அமைப்பின் பணிகளை விளக்கும் அவ்வமைப்பின் இணையதளம் முகவரி www.unitedeconomicforum.org

தகவலில் உதவி:
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், சென்னை.

நன்றி: காயல்பட்டினம்.காம்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...