Pages

Tuesday, November 10, 2015

அதிரை கடலில் பலத்த சூறாவளி காற்றால் படகு கவிழ்ந்தது: கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் உயிருடன் மீட்பு !

அதிராம்பட்டினம் நவம்பர். 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிரையை உள்ளடக்கிய தரகர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதிரை காந்தி நகரை சேர்ந்தவர் மீனவர் மருதப்பன் ( வயது 55 ). இவரது மகன் வீரக்குமார் ( வயது 19 ). இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது கடலில் புயல் சின்னம் உருவாகியிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலிலிருந்து படகில் இருவரும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்று பலமாக வீசியதில் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் பயணமான இருவரும் கடலில் விழுந்தனர்.

இருவரும் உயிரை பணயம் வைத்து சுமார் 4 மைல் தூரத்திற்கு கடலில் நீந்தியவாறு கரையை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே படகில் மீனவர்கள் வருவதை அறிந்து 'காப்பாற்றுங்கள்', 'காப்பாற்றுங்கள்' என கூறியவாறு சைகை காட்டினர். இருவரும் கடலில் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இருவரையும் உயிருடன் பத்திரமாக மீட்டு தாங்கள் ஓட்டி வந்த படகில் ஏற்றிக்கொண்டு கரைக்கு திரும்பினர். இதையடுத்து இருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடலில் மூழ்கிய படகு மற்றும் வலை ஆகியவற்றை மீனவர்கள் தேடி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ 2 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...