Pages

Saturday, November 7, 2015

பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி: 20 பயணிகள் படுகாயம் !

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு இன்று காலை தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 8.30 மணியளவில் தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டை சைதாம்பாள்புரத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ் திடீரென நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த 3 தென்னை மரம் மீது மோதியது. இதில் மரம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் பஸ் கட்டுக்குள் அடங்காமல் நடு ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒரத்த நாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த துர்காதேவி (25) சம்பவ இடத்திலே பலியானார்.

அவர் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக திருச்சிக்கு ஜவுளி எடுக்க செல்ல தஞ்சைக்கு வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

இவரது தந்தை சந்திரகாசன். இவர் இறந்து விட்டதால் தாய் பிச்சையம்மாள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

பஸ் பயணிகள் 20–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்த ஜே.சி.பி. எந்திரம் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினார்கள்.

பஸ் டிரைவர் வேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...