Pages

Saturday, November 7, 2015

கையால் எழுதிய பாஸ்போர்ட்கள் வரும் 24 நவம்பர் 2015 முதல் செல்லாது !

கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வரும் 24 ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அதன்பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பானது தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், விசாவுக்கு விண்ணப்பித்தால் அது நிராகரிக்கப்படவோ அல்லது பயணத்தின் போது வேறு ஏதேனும் பிரச்னையையோ எதிர்கொள்ள நேரிடலாம்.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களிலும் உள்ள விவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. அந்த வகை பாஸ்போர்ட்கள் மட்டுமே சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குறிப்பாக 1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் செல்லுபடியாகும் காலம் 20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும். எனவே, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், வரும் 24 நவம்பர் ஆம் தேதிக்கு முன்பாக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...